செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் லிமிடட் ஆனது புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சை மற்றும் இனங்காணல் தொடர்பாக விசேடத்துவம் பெற்றதும், செலிங்கோ லைஃப் இற்கு முழுமையாக உரித்துடையதுமான துணை நிறுவனம் ஆகும். இந்நிலையமானது அதிநவீன கருவிகளுடன் சிறந்த அனுபவமும் தகைமையுமுள்ள மருத்துவ ஆலோசகர் குழாமையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அத்துடன் இன்று உலகில் புற்றுநோய்க்காக காணப்படும் அதிக முன்னேற்றகரமான கதிரியக்க சிகிச்சையான டோமோதெரபி சிகிச்சையை நம் நாட்டில் வழங்கும் ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை நிலையம் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் ஆகும்.
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் ஆனது இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப் இற்கு முழுமையாக உரித்துடைய துணை நிறுவனம் என்பதோடு, அதிநவீன புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சையை வழங்கி வருகின்றது. இந்நிலையம் இரு பிரதான விடயங்களில் விசேடத்துவமானது. அவை புற்றுநோய் இனங்காணல் மற்றும் சிகிச்சை, அத்தோடு நீரிழிவு சிகிச்சை மற்றும் பராமரிப்பு என்பனவாகும்.
டோமோதெரபி என்பது இன்று உலகில் காணப்படும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை என்பதோடு ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள அனைத்து முதற்தர புற்றுநோய் சிகிச்சை நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப் புரட்சிகரமான புதிய சிகிச்சையானது வேகமானது, துல்லியமானது மற்றும் நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்திக்க உதவுகிறது. எம் நாட்டில் வாழும் மக்களுக்கும், அதிசிறந்த புற்றுநோய் சிகிச்சையை இலங்கையில் எதிர்பார்க்கும் வெளிநாட்டினருக்கும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சையை தரும் இப் புதிய தொழினுட்பத்தை அறிமுகப்படுத்தும் முதலாவது இலங்கை அமைப்பு என்பதில் நாம் மிகுந்த பெருமிதமடைகின்றோம்.
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் இனது மேலுமொரு தனித்துவப் பண்பு யாதெனில், நோயாளர்களும் அவரது அன்புக்குரியவர்களும் மிக நெருக்கமாக இருக்கக்கூடிய சௌகரியமான, வீட்டைப் போன்ற சூழலில் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்திட மேலதிக அவதானம் செலுத்துவதாகும்.
அது மட்டுமல்ல, பல்வேறுபட்ட உலகத்தரத்திலான புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சை சேவைகளை இலங்கையர்களுக்கு இங்கு, எமது நாட்டில், அவர்கள் தமக்குப் பிடித்த அனைத்து விடயங்களுக்கும் அருகிலிருந்து பெற்றுக்கொள்ளும் விதமாக வழங்க முடிவதை முன்னிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.
திரு. ஆர். ரெங்கநாதன் - தலைவர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்
டோமோதெரபி சிகிச்சையை நாட்டில் வழங்கும் ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை நிலையம் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் மட்டுமே. இது புற்றுநோய் தொடர்பாக இன்று உலகில் காணப்படும் அதிக முன்னேற்றகரமான கதிரியக்க சிகிச்சையாகக் கருதப்படுகின்றது. இது இலங்கையின் முதலாவது Linear Accelerator இனை உள்ளடக்கிய நிலையத்தின் முதலாவது கதிரியக்க சிகிச்சை பிரிவுக்கு கிடைத்துள்ள மேலதிகமாக நலனாகும்.
செலிங்கோவின் டோமோதெரபி நிலையமானது உலகளாவிய ரீதியில் டோமோதெரபி துறையில் முன்னணி வகிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் Accuray Inc. இனது சமீபத்திய TomoHD™ சிகிச்சை முறைமையை கொண்டுள்ளது.
Read MoreTo reduce the number of Cancer and Diabetes patients in Sri Lanka by facilitating early detection, screening, prevention and to offer a client focused service in a pleasant and relaxed non hospital environment setting at an affordable price.