இப்பொழுது நீங்கள் புற்று நோய் சிகிச்சைக்கு வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதிசிறந்த சிகிச்சை, அதிசிறந்த மருத்துவர்கள், அதிநவீன தொழினுட்பம் மற்றும் அரவணைப்புமிக்க தனிப்பட்ட சிகிச்சை உங்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கிறது.
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் ஆனது செலிங்கோ ஹெல்த்கெயார் சென்டர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு தொடக்கத்தில் இலங்கை மக்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகளை வழங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து, நிலையமானது இந்நோய், அதன் புள்ளிவிபரங்கள், காரணங்கள் மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதன் ஒரு முக்கியமான பகுதியாக ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டால் சில புற்றுநோய்களை குணப்படுத்த முடியுமென மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இத் தனியார் பரிசோதனை நிலையமானது, இலங்கையில் புற்றுநோய் தொடர்பான ஆரம்பக்கட்ட இனங்காணல் மற்றும் சிகிச்சையில் ஒரு மாபெரும் படியாக அமைந்தது.
2004 இல் ஆரம்பிக்கப்பட்ட செலிங்கோ டயபெடீஸ் சென்டர் ஆனது இலங்கையில் அதிகரித்துவரும் நீரிழிவு நோயாளர்களுக்கு பெறுமதிமிக்க சேவையை வழங்கி வருகின்றது. இச் சிறப்பு நிலையம் நீரிழிவு சிகிச்சைக்கான புதிய தொழினுட்பங்களை தன்னகத்தே கொண்டிருப்பதோடு நீரிழிவு மருத்துவப் பரிசோதனைகள், நோய்க்கான சிகிச்சை மற்றும் நீரிழிவு சிகிச்சை மருந்தகம் என்பவற்றுடன் பொது சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகூட சேவைகளை வழங்கி வருகின்றது. சௌகரியமான, வீட்டைப் போன்ற சூழலில் அதியுயர் தரத்திலான பராமரிப்பை நோயாளர் பெற்றுக்கொள்வதை அதிக அனுபவமிக்க நிபுணர்களை உள்ளடக்கிய சிரேஷ்ட குழுவினர் உறுதி செய்கிறார்கள்.
2007 இல் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ், Linear Accelerator கொண்ட இலங்கையின் முதலாவது கதிரியக்க சிகிச்சை பிரிவை அறிமுகப்படுத்தியதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் இலங்கை புற்றுநோயாளர்கள் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது முகங்கொடுக்க வேண்டியிருந்த உணர்வுரீதியான மற்றும் பொருளாதார தடைகளிலிருந்து காப்பாற்றப்பட்டனர். இப்பொழுது அவர்கள் தமது நாட்டிலேயே, தமது அன்புக்குரியவர்களுக்கு அருகில் இருந்தவாறு தமக்கு தேவையான சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.
டோமோதெரபி சிகிச்சையை நாட்டில் வழங்கும் ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை நிலையம் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் மட்டுமே. இது புற்றுநோய் தொடர்பாக இன்று உலகில் காணப்படும் அதிக முன்னேற்றகரமான கதிரியக்க சிகிச்சையாகக் கருதப்படுகின்றது. இது இலங்கையின் முதலாவது Linear Accelerator இனை உள்ளடக்கிய நிலையத்தின் முதலாவது கதிரியக்க சிகிச்சை பிரிவுக்கு கிடைத்துள்ள மேலதிகமாக நலனாகும்.
செலிங்கோவின் டோமோதெரபி நிலையமானது உலகளாவிய ரீதியில் டோமோதெரபி துறையில் முன்னணி வகிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் Accuray Inc. இனது சமீபத்திய TomoHD™ சிகிச்சை முறைமையை கொண்டுள்ளது.
