X

புற்றுநோய்க்கான பரந்தளவு பரிசோதனைத் தெரிவுகள் மற்றும் உலகத் தரத்திலான சிகிச்சை

இப்பொழுது நீங்கள் புற்று நோய் சிகிச்சைக்கு வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதிசிறந்த சிகிச்சை, அதிசிறந்த மருத்துவர்கள், அதிநவீன தொழினுட்பம் மற்றும் அரவணைப்புமிக்க தனிப்பட்ட சிகிச்சை உங்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கிறது.

ஏன் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்?

X
1 மருத்துவமனை ஒன்றிலிருந்து வேறுபட்ட, வீட்டைப் போன்ற சூழல்

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் நிலையத்தில் நீங்கள் உலவும்போது மருத்துவமனை ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாற்றத்தை உணர்வீர்கள். இந்நிலையமானது நோயாளர்களுக்கு உச்ச சௌகரியத்தை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது சொகுசும் சௌகரியமும் நிறைந்த உட்புற வசதிகள் அதிநவீன சிகிச்சை இயந்திரங்களுடன் சிறப்பாக பொருந்துவதோடு, இதன் மூலம் சௌகரியமான, அமைதியான, வீட்டைப் போன்ற சூழலில் நோயாளர்களுக்கு அதிசிறந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது.

2 குடும்பத்தினரைப் போன்ற ஊழியர்கள்

எமது நோயாளர்களைப் பொறுத்தவரை, எமது ஊழியர்கள் அன்பும் அரவணைப்பும் மிகுந்தவர்கள். சிகிச்சை முறைக்கேற்ப, உயர்தரத்திலான நிபுணத்துவமான பராமரிப்பு மற்றும் நெருக்கமான அவதானம் என்பன நோயாளர்களுக்குத் தேவை என்பது எமக்குத் தெரியும். எமது விசேட மருத்துவர்கள் மற்றும் தாதிமார் உயர்ந்த தொழில் நிபுணத்துவமும் அனுபவமும் கொண்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதோடு, எப்பொழுதும் நோயாளர்களுக்கு இதமான நட்புறவுமிக்க கவனிப்பை உடனுக்குடன் பெற்றுத்தர காத்திருக்கிறார்கள்.

3 பெண் நோயாளர்களுக்கு பெண் மருத்துவர்கள்

எமது பெண் நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பை பெற்றுத்தருவதற்கு முழுநேரமும் பணியாற்றும் விசேட பெண் மருத்துவர்களை நாம் கொண்டுள்ளோம். எமது பெண் நோயாளர், தங்களது மருத்துவர்களின் முன்னிலையில் இலகுவாகவும் சௌகரியமாகவும் இருக்க வேண்டுமென நாம் அறிந்திருப்பதே இதற்கான காரணம்.

4 எமது மருத்துவர்களது தனிப்பட்ட அவதானம்

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் இனது தனித்துவமான அம்சம் யாதெனில் எமது விசேட மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளரது தனிப்பட்ட தேவைகளுக்கும் நெருக்கமான அவதானத்தை செலுத்துவதாகும். இரு நோயாளர்களது சூழ்நிலைகளும் வெவ்வேறானவை என்பதை நாம் அறிந்திருப்பதோடு, எமது மருத்துவர்கள் தொடர்ந்து தயார் நிலையில் இருந்து, எந்தவொரு நேரத்திலும், அவர்களுக்கு அதிசிறந்த சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றுத் தருகிறார்கள்.

5 புற்றுநோய் மற்றும் நீரிழிவுக்கு விசேடத்துவ சிகிச்சை

புற்றுநோய் மற்றும் நீரிழிவுக்கு விசேடத்துவ சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றுத்தரும் இலங்கையிலுள்ள ஒரேயொரு தனியார் மருத்துவ நிறுவகம் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் மட்டுமே. எமது நிலையமானது, அதியுயர் தரத்திலான சிகிச்சையைப் பெற்றுத்தந்திட, உலகெங்குமுள்ள முன்னணி புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிறுவகங்கள் பயன்படுத்துவதற்கு நிகரான, சமீபத்திய, அதிநவீன இயந்திரங்களின் துணையை தன்னகத்தே கொண்டுள்ளது. செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் சிகிச்சைகள் அனைத்தும் அதிசிறந்த சிகிச்சையை வழங்குவதற்காக எம்முடன் இணைந்துள்ள நாட்டின் முன்னணி புற்றுநோயியலாளர்கள் மற்றும் நிபுணர்களாலேயே பெற்றுத் தரப்படுகின்றது.

6 புற்றுநோய் சிகிச்சைக்காக அதிநவீன கருவிகள்

எமது நோயாளர்களுக்கு அதிசிறந்த சிகிச்சையை உறுதி செய்வதற்காகவே புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்களில் நாம் தொடர்ந்தும் முதலீடு செய்வதுடன் தரமுயர்த்தல்களையும் மேற்கொண்டு வருகின்றோம். எமது கதிரியக்க நிலையம் Linear Accelerator பிரிவைக் கொண்டிருப்பதோடு, இது பல்வேறு புற்றுநோய்களுக்காக உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் கதிரியக்க சிகிச்சையாகும். அத்துடன் நாம் டோமோதெரபி இயந்திரம் ஒன்றிலும் முதலீடு செய்துள்ளோம். இதுவே உலகின் அதிக முன்னேற்றகரமான புற்றுநோய் சிகிச்சை முறையாகும்.

7 விசேட உளவள ஆலோசனை சேவைகள்

செலிங்கோ ஹெல்த்கெயார், நோயாளர்களுக்கு நிபுணத்துவமிக்க உளவள ஆலோசனை சேவைகளை வழங்குவதை நாம் உங்களுக்கு அறியத் தருகின்றோம். தமது சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு விசேட வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அதிகமானோருக்கு அவசியம் என்பதை நாம் அறிவோம். இதனை முன்னிட்டு, அவசியமானோருக்கு உளவள ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பெற்றுத் தந்திட அக்கறை மிகுந்த நிபுணர்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

logo