X

புற்றுநோய்க்கான பரந்தளவு பரிசோதனைத் தெரிவுகள் மற்றும் உலகத் தரத்திலான சிகிச்சை

இப்பொழுது நீங்கள் புற்று நோய் சிகிச்சைக்கு வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதிசிறந்த சிகிச்சை, அதிசிறந்த மருத்துவர்கள், அதிநவீன தொழினுட்பம் மற்றும் அரவணைப்புமிக்க தனிப்பட்ட சிகிச்சை உங்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கிறது.

தலைமைத்துவம்

திரு. ஆர். ரெங்கநாதன்

தலைவர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

திரு. ஆர். ரெங்கநாதன்

தலைவர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

தொழிற்துறையில் பட்டயக் கணக்காளரான (Charted Accountant) திரு. ஆர். ரெங்கநாதன் 1983 இல் செலிங்கோ நிறுவனத்தில் இணைந்துகொண்டார். 1987 இல் இலங்கை அரசாங்கம் தனியார் காப்புறுதியாளர்களை காப்புறுதி துறையில் நுழைவதற்கு அனுமதித்த பின்னர் செலிங்கோ இன்ஷூரன்ஸின் ஆயுட் காப்புறுதிப் பிரிவை உருவாக்குவதற்கு இவர் பணிக்கப்பட்டார். ஆயுட் காப்புறுதியின் விந்தைகளில் திடமான நம்பிக்கை கொண்டிருந்த இவர், இலங்கையின் அனைத்து குடும்பங்களுக்கும் செலிங்கோ லைப் காப்புறுதி ஒப்பந்தத்தின் பாதுகாப்பை பெற்றுத்தரும் நோக்கத்தை கொண்டிருந்ததோடு, இதே எண்ணத்துடன் செயற்படும் தொழில் நிபுணத்துவமிக்க அணியொன்றை அமைத்தார். இவரது வழிகாட்டலின் கீழ் செலிங்கோ லைப் தொடர்ச்சியாக இலங்கை காப்புறுதித் துறையில் முன்னிலை வகித்து வருகின்றது. இன்று திரு. ரெங்கநாதன் அவர்களே செலிங்கோ லைஃப் தலைவர். ஆயுட் காப்புறுதித் துறையில் வெற்றியை கைப்பற்றிய பின்னர் இலங்கை மக்களுக்கு கட்டுப்படியான கட்டணங்களில் உடல்நல சேவைகளைப் பெற்றுதரும் எண்ணத்துடன் உடல்நலப் பராமரிப்பு துறைக்குள் பிரவேசித்தார். வொஷிங்டன் கென்சர் இன்ஸ்டிடியூட் ஒத்துழைப்புடன், புற்றுநோயை இனங்காணும் நிலையமொன்றை அமைத்தமை மூலம் அதனை அவர் ஆரம்பித்தார். அத்துடன் அண்மைக்கால, அதிநவீன தொழினுட்பங்களை முழுமையாகக் கொண்ட இலங்கையின் முதலாவது தனியார் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும்.

திரு. டி. ரணசிங்க

பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

திரு. டி. ரணசிங்க

பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

வர்த்தகத் துறையில் 35 வருட அனுபவம் நிறைந்த திரு. ரணசிங்க அவர்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் என்பவற்றில் சிறப்புத் தேர்ச்சியும் அறிவும் மிக்கவர். இன்று திரு. ரணசிங்க அவர்கள் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் தாய் நிறுவனமான செலிங்கோ லைஃப் இனது நிர்வாகப் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். 1986 இல் செலிங்கோவுடன் இணைந்து கொண்டதோடு, 1988 இல் செலிங்கோ இன்ஸ்ஷூரன்ஸை ஸ்தாபித்த அணியின் முதன்மை உறுப்பினர் ஆவார். திரு. ரணசிங்க அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தித்தின் Postgraduate Institute of Management (PIM) இடமிருந்து MBA பட்டத்தை கொண்டுள்ளார். இவர் Chartered Institute of Marketing, Sri Lanka Region இனது ஸ்தாபித்தல் அங்கத்தவர் ஒருவர் என்பதோடு நிறைவேற்று சபையில் ‘சிரேஷ்ட பிரதி தலைவர்” உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் திரு. ரணசிங்க ஒரு Chartered Marketer மற்றும் Chartered Institute of Marketing, UK அங்கத்தவர் ஒருவாராவார்.

திரு. பி.ஏ. ஜயவர்தன

பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

திரு. பி.ஏ. ஜயவர்தன

பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

25 வருட அனுபவமிக்க திரு. ஜயவர்தன நிதித்துறையில் நிபுணத்துவமிக்க ஒருவர் ஆவார். இவர் 1990 இல் செலிங்கோவின் ஆயுட் காப்புறுதி பிரிவில் பிரதான கணக்காளராக (கிளைகள்) இணைந்து கொண்டதோடு அப்பொழுது முதல், நிறுவனத்தின் வெற்றிக்கு தனது பெறுமதியான பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது தேர்ச்சி மற்றும் ஈடுபாடு என்பன 2005 இல் பணிப்பாளர் சபை அங்கத்தவராக இவரை உயர்த்தின. இன்று இவர் செலிங்கோ லைஃப் இனது பணிப்பாளர் / பிரதான நிதி அலுவலராக சேவையாற்றுகின்றார். திரு. ஜயவர்தன இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகம் (The Institute of Chartered Accountants of Sri Lanka) மற்றும் பதிவு செய்யப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவகத்தின் அங்கத்தவர் ஒருவரும் ஆவார்.

திரு. சமித ஹேமச்சந்திர

பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

திரு. சமித ஹேமச்சந்திர

பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

ஆயுட் காப்புறுதி சந்தையில் முதலிடத்திலுள்ள செலிங்கோ லைஃப் இனது சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஆவார். இவர் விற்பனை முகாமைத்துவம், வர்த்தகநாம முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் என்பவற்றில் 18 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் நிறைந்தவர். இதுவரை இவர் பல ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தொடர்பாடல் நடவடிக்கைகளின் வடிவமைப்பு, விருத்தி மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பவற்றில் நேரடியாகப் பங்கேற்றுள்ளார். “செலிங்கோ லைஃப்” வர்த்தக நாமம் இவரது பங்களிப்பு காரணமாக 2004, 2005 மற்றும் 2008 இல் SLIM வர்த்தகநாம விசேடத்துவ விருதுகளில் பிரான்ட் சாம்பியன் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதோடு, செலிங்கோ லைஃப் வருடத்தின் நியாயமான வர்த்தகநாமம் மற்றும் வருடத்தின் சேவை வர்த்தகநாமம் ஆகிய விருதுகளையும் பெற்றது. இவரும் செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் பணிப்பாளர்களில் ஒருவர் என்பதோடு புற்றுநோய் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு தனியார் கதிரியக்க சிகிச்சை அலகை செலிங்கோ ஹெல்த்கெயாரில் ஸ்தாபித்த முதல்நிலை அங்கத்தவர்களில் ஒருவராவார். இவர் வெற்றிகரமான பல சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் CIM – UK இனது அங்கத்தவர் மற்றும் Chartered Marketer, பதிவு செய்யப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் (CMA) - அவுஸ்திரேலியா மற்றும் University of Western Sydney இனது வணிக நிர்வாக முதுமாணிப் பட்டத்தையும் கொண்டுள்ளார்.

திரு. தாருக டி சில்வா

பொது முகாமையாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

திரு. தாருக டி சில்வா

பொது முகாமையாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

திரு. டி சில்வா சிரேஷ்ட முகாமைத்துவத்தில் 12 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு, செலிங்கோ டயபடீஸ் சென்டர் அத்துடன் கதிரியக்க பிரிவு மற்றும் டோமோதெரபி நிலையம் என்பவற்றைக் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் செலிங்கோ லைப் அணியினருடன் 2002 இல் இணைந்துகொண்டதோடு, நிதி மற்றும் முதலீட்டுப் பிரிவில் சேவையாற்றினார். 2008 இல் செலிங்கோ ஹெல்த்கெயார் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார். திரு. டி சில்வா BBA (special) Honors, ACCA மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBA ஆகிய தகைமைகளைக் கொண்டுள்ளார்.

பேரா. ரொஹான் ஜயசேகர

மருத்துவப் பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

பேரா. ரொஹான் ஜயசேகர

மருத்துவப் பணிப்பாளர் - செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

தனது தேர்ச்சியையும் அளப்பரிய அறிவையும் செலிங்கோ ஹெல்த்கெயார் நிலையத்தின் அணிக்கு பங்களிக்கும் இவர் இலங்கை மருத்துவத் துறையில் வலிமைமிக்க ஒருவராவார். வித்யாஜோதி பேரா. ஜயசேகர அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் ஆவார். மனித மரபியல் பற்றிய இலங்கையின் முதன்மையாளரான இவர், M.B.B.S., Ph.D. (N’Cle.U. K) C.Biol. FRSB (Lond.) Hon. FCSSL, Hon. FCOSL பட்டங்களுடன் பல நிர்வாக, கற்பித்தல், மற்றும் ஆய்வு விடயங்களில் 41 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளார். இலங்கை அறுவை சிகிச்சை கல்லூரி மற்றும் இலங்கை Ophthalmologists கல்லூரி கௌரவ அங்கத்துவரான இவர், 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மனித மரபியல் பிரிவின் ஸ்தாபகப் பணிப்பாளராகவும், உடற்கட்டமைப்பு தலைவர் மற்றும் தலைமை விரிவுரையாளராகவும் இருந்துள்ளார். கால்டன் நிறுவக அங்கத்தவர். Chartered உயிரியலாளர். Royal Society of Biology, London அங்கத்தவர். பொதுநலவாய புலமைப்பரிசில் வெற்றியாளர் மற்றும் பொதுநலவாய சிரேஷ்ட மருத்துவ நிபுணர். மேலும் இவர் Cytogenetics இல் கலாநிதிப் பட்டத்தை கொண்டிருப்பதோடு, அதனை 1981 ஆம் ஆண்டு பொதுநலவாய ஆய்வு புலமைப்பரிசிலில் பெற்றுக் கொண்டவராவார்.

மறைந்த Doctor சரத் அபயகோன்

ஸ்தாபகர் / பணிப்பாளர்

மறைந்த Doctor சரத் அபயகோன்

ஸ்தாபகர் / பணிப்பாளர்

Doctor சரத் அபயகோன் அவர்கள் புற்றுநோயியல் துறையில் சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர் (Senior Consultant Oncologist) ஒருவராக 18 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் மஹரகம புற்றுநோய் மருத்துமனையில் புற்றுநோயியல் சிரேஷ்ட மருத்துவ ஆலோசகராக கடமையாற்றியுள்ளதோடு, புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட சிறப்பு மருத்துவ அலுவலராக பப்புவா நியூகினியாவில் மூன்று வருடங்கள் கடமையாற்றியுள்ளார். இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வைட்செப்பேல் ரோயல் லண்டன் மருத்துவமனையில் தீவிர பயிற்சியைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இலங்கை மருத்துவ புற்றுநோயியல் சபையின் தலைவராகவும் 2003 முதல் 2006 வரை கடமையாற்றியுள்ளார்.
logo