உடலின் குறிப்பிட்ட பாகமொன்றின் கலங்கள் கட்டுப்பாட்டை மீறி வளர்ச்சியடைந்து ஒரு கட்டியாக அல்லது திரட்சியாக உருவாவதே புற்றுநோய் ஆகும். இன்று வெவ்வேறு புற்றுநோய் வடிவங்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கிறது. இவற்றில் மார்பகப் புற்று, மெலனோமா அல்லது சருமப் புற்று, நுரையீரல் புற்று, முன்னிலைசுரப்பி, லியூக்கேமியா மற்றும் பெருங்குடல் புற்று என்பன உள்ளடங்கும். உலகின் அதிசிறந்த விஞ்ஞானிகள் இது தொடர்பாக தீவிரமான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சில தசாப்தங்களுக்கு முன் வரையில் இதுபற்றி நிபுணர்களுக்கு எவ்வித தீர்வுகளும் இல்லாதிருந்த போதும், இன்று அதிநவீன தொழினுட்பத்தின் உதவியோடு இந்நோயை ஆரம்பக் கட்டங்களிலேயே இனங்கண்டு, அசாதாரணமான கலங்களை அழிப்பதற்கு உதவும் வழி வகைகளை மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கியுள்ளனர். புற்றுநோய் ஒரு மிகக் கொடிய நோயாக இருப்பினும் உலகளாவிய ரீதியில் அதிக கவனத்தை ஈர்த்துவரும் ஒன்றாக இருப்பினும், ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டமை காரணமாக அநேகமானோர் வெற்றிகரமாக இதனை எதிர்த்து குணமடைந்துள்ளனர்.
இன்று உலகில் புற்றுநோய் தொடர்பாக காணப்படும் மிகவும் முன்னேற்றகரமான சிகிச்சையே டோமோதெரபி ஆகும். கட்டிகளை இலக்கு வைக்கும் இத் தனித்துவமான முறையானது, புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக, ஒருங்கிணைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணத்தில் வடிவ படங்களால் வழிநடத்தப்படும் கதிரியக்க சிகிச்சையாகும். இந்த சிகிச்சையில் TomoHD அலகு மிகச்சிறிய கட்டிகளுக்கும் துல்லியமான கதிரியக்க சிகிச்சையை மேற்கொள்கின்றது.
Read MoreCancer can affect almost any part of the human body. It is one of the most common diseases we are faced with today. What is Cancer? How does a cancer Start? Click here to find out.
Read More