X

புற்றுநோய் சிகிச்சை செயன்முறையில் உளவள ஆலோசனை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது

புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், குறிப்பாக மூளைப் புற்றுநோயானது உடல்ரீதியாகவும் அதேவேளை மன ரீதியாகவும் உளைச்சலைத் தரும். இதன் காரணமாகவே சிகிச்சை செய்முறையில் சரியான, நிபுணத்துவமிக்க உளவள ஆலோசனை முக்கியத்துவம் பெறுகின்றது.

மூளை புற்றுநோய் சிகிச்சை

மூளைப் புற்றுநோய் மூளையில் அமைந்துள்ள அநேகமாக வெவ்வேறு வகை கலங்களில் ஆரம்பிக்கலாம், அல்லது உடலின் ஏனைய பகுதிகளிலுள்ள புற்றுநோய் கலங்கள் மூளைக்கு பரவுவதனால் ஏற்படலாம். மூளைக் கட்டிகள் மூளை இழையத்தை சேதமாக்கலாம், அதனால் Oedema (மூளை இழையத்தில் அடைக்கப்பட்டுள்ள மேலதிக திரவத்தினால் ஏற்படும் வீக்கம்) ஏற்பட்டு நரம்புரீதியான ஒழுங்கின்மைகளுக்கு காரணமாகும்.

மூளைக் கட்டிகளின் சில அறிகுறிகள்

  • அதிகாலை நேர தலைவலிகள், தலைவலி காரணமாக தொடர்ச்சியாக தூக்கம் கலைதல்
  • குமட்டல் மற்றும் அடிவயிற்றில் வலி
  • எவ்வித உணவுத் தொடர்புமின்றி வாந்தி எடுத்தல்
  • ஒரு காதின் கேள்தகவு படிப்படியாக குறைவடதல்
  • கண்பார்வை குறைவடைதல்
  • உடல் இயக்கங்களின் கட்டுப்பாட்டை இழத்தல்
  • அலுப்பு
  • தூக்கம் வருவதில் பிரச்சினைகள்
  • உடலின் சமநிலை குறைவடைதல்.

மூளைப் புற்றுநோய்க்கு ஏதுவாகும் காரணிகள்

  • மொபைல் போன்களால் வெளிவிடப்படும் கதிரியக்க அலைகள்
  • கிருமி நாசினிகள் மற்றும் ஏனைய இரசாயனங்களுக்கு நீண்டகாலம் முகங்கொடுத்தல்
  • மரபுவழிக் காரணிகள்
  • தலைக் காயங்கள் மற்றும் இரத்தக்கட்டு

 

logo