X

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் புற்றுநோய் சிகிச்சைக்கு பலதரப்பட்ட சிகிச்சை தெரிவுகளை வழங்குகிறது.

நாம் பலதரப்பட்ட சிகிச்சைகளை வழங்குவதனால், நோயாளர் தமது வகை மற்றும் வடிவத்துக்கு பொருத்தமான சிகிச்சையை பெறலாம்.

கெமோதெரபி

கெமோதெரபியானது நோயைக் குணப்படுத்த இரசாயன பதார்த்தங்களைப் பயன்படுத்தல் ஆகும். இவை cytoxic (புற்றுநோய் எதிரி) மருந்துகளை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்துதல் என அறியப்படுகின்றது. புற்றுநோய் கெமோதெரபியானது ஒற்றை மருந்தாகவோ அல்லது மருந்துகளின் கலவையாகவோ இருக்கலாம். அத்துடன் இது உடலிற்குள் நுழைக்கப்பட்ட அல்லது வில்லை ஒன்றின் வடிவில் வாய் வழியாக தரப்பட்ட குழாய் ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்படலாம். முறைமைசார் சிகிச்சையாக கருதப்படும் கெமோதெரபி அறுவை அல்லது கதிரியக்க சிகிச்சைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

கெமோதெரபி மருந்துகளால் புற்றுநோய் கலங்கள் பிரிகையடைவதையும் இனப்பெருக்கம் செய்வதையும் தடுக்க முடியும். மருந்துகள் இரத்தத்தின் ஊடாக கொண்டு செல்லப்படுவதால், அவற்றால் உடலெங்குமுள்ள புற்றுநோய் கலங்களை அடைய முடிவதோடு, ஆரோக்கியமான கலங்களும் இதனைப் பெறும். ஆரோக்கியமான கலங்களால் கெமோரெபியால் நடைபெற்ற பாதிப்பை சரி செய்ய முடியும். எனினும் புற்றுநோய் கலங்களால் அவ்வாறு செய்ய முடியாத காரணத்தால் அவை இறக்கும்.

புற்றுநோய் சிகிச்சை பெறும் 50% க்கு அதிகமான மக்கள் கெமோதெரபியை மேற்கொள்கிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கிலான மக்கள் கெமோதெரபிக்கு நன்கு பதிலளிப்பதோடு, இந்த அணுகுமுறை அவர்களது புற்றுநோயை சிறப்பாக சிகிச்சையளித்து துடிப்பான வாழ்க்கையை வாழ உதவுகின்றது. மேலதிகமாக, முன்பு கெமோதெரபியுடன் ஏற்படும் பக்க விளைவுகள் இப்பொழுது இலகுவாக தடுக்கப்பட அல்லது கட்டுப்படுத்தப்பட முடிவதோடு, கெமோதெரபியை பெற்றுக்கொண்டே தமது நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படுவதற்கு பலருக்கு உதவுகின்றது.

கெமோதெரபி மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி அறிந்துகொள்வது உங்கள் சுயபராமரிப்பை நிர்வகிக்க உதவுவதோடு, உங்கள் சிகிச்சை மற்றும் விளைவுகளை சீர்செய்ய உதவுகின்றது. உங்கள் சூழ்நிலை மற்றும் உங்களது புற்றுநோய் வகையை அறிந்துள்ள மருத்துவருடன் சிகிச்சைகள் பற்றி கலந்துரையாடுவது சிறந்தது.

logo