TTomoTherapy ஆனது செறிவு கிரமமாக்கப்பட்ட கதிரியக்க சிகிச்சை (IMRT) இனது முன்னேற்றகரமான வடிவத்தை, கணனி மயப்படுத்தப்பட்ட டோமோக்ரெபி (CT) ஸ்கேனிங் தொழினுட்பத்தின் துல்லியத்துடன் ஒன்றிணைப்பதோடு, இதனை ஒரே இயந்திரத்தில் மேற்கொள்கின்றது. இந்த முன்னேற்றகரமான தொழினுட்பத்துடன் உதவியோடு, அணுகுவதற்கு கடினமான கட்டிகளுக்கு சிகிச்சையளித்திட சக்திமிக்க துல்லியமான கதிரியக்க கற்றைகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு சிகிச்சையின் முன்பதாகவும் கட்டியின் வடிவம் மற்றும் அமைவிடத்தை உறுதி செய்வதற்காக உள்ளமைக்கப்பட்ட (CT) ஸ்கேனிங் உதவுவதனால், டோமோதெரபி நலமான இழையங்கள் மற்றும் பாகங்களுக்கான கதிரியக்க பாதிப்பைக் குறைக்கிறது.
ஒவ்வொரு சிகிச்சைக்கும் முன்பதாக முன்னேற்றகரமான ஸ்கேனிங் தொழினுட்பம் சிகிச்சை பிரதேசத்தின் முப்பரிமாண படம் ஒன்றை வழங்குகின்றது. இதன் காரணமாக குறித்த அந்நாளில் கட்டியின் அளவு, வடிவம் மற்றும் அமைவிடத்திற்கு ஏற்ப கதிரியக்கக் கற்றைகள் செலுத்தப்படலாம். சிகிச்சை நேரத்தில் கதிரியக்கக் கற்றைகளின் செறிவு மற்றும் திசை என்பவற்றை நாம் நிகழ் கணத்தில் மாற்றியமைக்க முடியும். இந்த புரட்சிகரமான நுணுக்கமான சிகிச்சை அணுகுமுறை ஒரு தடவைக்கு ஒரு படலம் என்றவாறு குணப்படுத்துகிறது. நலமான இழையங்கள் மற்றும் அங்கங்களுக்கு குறைவான கதிரியக்கமே சென்றடைவதால் பக்கவிளைவுகள் அதிகளவு குறைக்கப்படுகின்றன.
360º செலுத்துகை
வழமையான இயந்திர வடிவமைப்புகள் ஒரு சில திசைகளில் மாத்திரமே கதிரியக்கத்தை செலுத்த அனுமதிக்கும். டோமோதெரபி சிகிச்சை முறைமையின் linear accelerator (linac) ஆனது CT ஸ்கேனருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளரை சுற்றி அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியாக டோமோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம். அதிக திசைகளில் கதிரியக்கத்தை செலுத்த முடிவதால், மருத்துவர்கள் சிகிச்சைகளை அதிகளவு கட்டுப்பாட்டுடன் திட்டமிடுவதற்கு முடிவதோடு கட்டியை அழிப்பதற்கான கதிரியக்க அளவிலும் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. இதனால் குறுகிய மற்றும் நீண்டகால பக்க விளைவுகளுக்கான சாத்தியம் குறைவடைகின்றது.
இலக்கை நோக்கி ஆயிரக்கணக்கான கற்றைகள்
டோமோதெரபி சிகிச்சையானது காப்புரிமை பெற்ற multi-leaf collimator (MLC) ஒன்றைப் பயன்படுத்துவதோடு, அது கதிரியக்க கற்றையை கீற்றுகளாக பிரித்து, அனைத்தையும் கட்டியை நோக்கி செலுத்துகின்றது. வழமையாக ஒரு டோமோதெரபி சிகிச்சை வேளையில் பல்லாயிரக்கணக்கான கற்றைக் கீற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. சக்திமிக்க மென்பொருளினால் கட்டியை அழிப்பதற்கான மொத்த கதிரியக்க அளவும் சீர்செய்யப்பட்டு, நலமான இழையங்களுக்கான பாதிப்பு குறைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நோயாளருக்கும் CTrue™ பட வழிகாட்டல்
எமது தனித்துவமான வடிவமைப்பு 360º விநியோக அமைப்பை சாத்தியமாக்குகின்றது. அதைவிடவும் முக்கியமாக, இது CT படங்களை ஒன்றிணைப்பதோடு அதனை நாளாந்தம் ஒவ்வொரு சிகிச்சை வேளையிலும் துல்லியமான விநியோகத்தை வழிநடத்துவதற்குப் பயன்படுத்தலாம். வேறு எவ்வித கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களும் இத்தகைய தடங்கலற்ற படங்களின் ஒன்றிணைப்பையும் செறிவு ஒழுங்காக்கல் கதிரியக்க சிகிச்சையையும் வழங்குவதில்லை. .
புற்றுநோய் தொழினுட்பத்தில் கிடைக்கும் புரட்சிகரமான ஒரு புத்தாக்கமான பட வழிகாட்டல் கதிரியக்க சிகிச்சையை (IGRT) நாம் பயன்படுத்துகின்றோம்.
சுவாசம் மற்றும் உடலின் ஏனைய அசைவுகளின் காரணமாக கட்டிகள் இடம் மாறலாம். சிகிச்சை வேளையில் கட்டியின் இடத்தை அறிவதற்கும் தொடர்வதற்கும் எமது மருத்துவர்களுக்கு (IGRT) உதவுகிறது. இத்தொழினுட்பத்தின் உதவியோடு, சுவாசத்தினாலும் மற்றும் சிறுநீர்ப்பையின் அசைவுகளினாலும் இடம் மாறும் கட்டிகளுக்கு துல்லியமான கதிரியக்க சிகிச்சையை வழங்கும் திறனை டோமோதெரபி கொண்டுள்ளது.
அத்துடன் இதன் மூலமாக, திட்டமிடப்பட்ட சிகிச்சை எல்லைக்கு வெளியில் கட்டி நகரும்போது எமது கதிரியக்க புற்றுநோயியலாளர்கள் உரிய தொழினுட்ப திருத்தங்களை மேற்கொள்வதற்கும் உதவுகின்றது. இதன் விளைவாக, கதிரியக்க சிகிச்சை முடியுமான அளவு கட்டியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதோடு, நலமான இழையங்களுக்கான கதிரியக்க வீச்சு கட்டுப்படுத்தப்பட்டு கதிரியக்கத்தால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள் குறைகிறது.
மூன்று சுயவுணர்வு கொண்ட டெப்களின் மூலமாக, டோமோதெரபி சிகிச்சை திட்டமிடல் முறைமையானது, எளிதானது முதல் சிக்கலான சந்தர்ப்பங்கள் வரை, மதிநுட்பமான IMRT அல்லது 3DCRT சிகிச்சை திட்டங்களை துரிதமான மற்றும் துல்லியமான சிகிச்சை விநியோகங்களுக்காக விரைவாகவும் சுயமாகவும் உருவாக்குவதற்கு உதவுகின்றது.
டோமோதெரபி சிகிச்சை திட்டமிடல் முறைமையில், கண்டறிதலுக்கான CT மற்றும் குறிப்பிட்ட கதிர்வீச்சு இலக்குகளையும் தடைகளையும் உள்ளடக்கிய உடற்கூற்று கட்டமைப்பு தகவல்களின் அடிப்படையில் சிகிச்சைகள் வகுக்கப்படுவதோடு திட்டங்கள் சீராக்கப்படும். முப்பரிமாண கதிர்வீச்சு விநியோகங்கள் மற்றும் வீச்சு கொள்ளளவு நிகழ்வெண் வரைபடங்கள் (DVHs) என்பன பகுப்பாய்வு கருவிகளாக கிடைப்பதனால், திட்டமிட்ட வீச்சை அனுமதிக்க அல்லது மாற்றியமைக்க மற்றும் சீராக்குவதற்கு முடியும்.
VoLOTM திட்டமிடல் மென்பொருளுடன் ஒரு தொகை கருவிகளையும் டோமோதெரபி வழங்குகின்றது.
TomoHD™ System ஆனது TomoHelical™ மற்றும் TomoDirect™ ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து ஒரே, விரிவான தீர்வாக்குகிறது. இதன் மூலம் எந்தவொரு சிக்கலினதும் மருத்துவ அறிகுறிகளை சிறப்பாகக் கையாள முடிவதோடு, கதிரியக்க புற்றுநோயியல் சிகிச்சை மற்றும் நோயாளர்களுக்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தீர்வின் மூலம் உடலின் எப்பகுதியிலும் உள்ள கட்டிகளுக்கும் துல்லியமாகவும் சிறப்பாகவும் சிகிச்சையளிக்க முடியும்.
பயனுறுதி மற்றும் செயற்பாடு என்பவற்றிற்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள TomoHD System ஆனது பரந்த ஒருங்கிணைப்பை வழங்குவதோடு, இதில் OIS இணைப்பு, மேம்படுத்தப்பட்ட பயன்பாடு மற்றும் உயர் செயற்பாடு என்பன உள்ளடங்கும். அத்துடன் இது சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிக வசதியைத் தருகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தை கொண்டமைந்துள்ளது. இதனால் பழைய கதிரியக்க சிகிச்சை கருவியை விட சிறிய இடத்தில் வைக்கப்படலாம்.
டோமோதெரபி முறைமையானது புற்று நோய்க்கான சிகிச்சைகளை விநியோகிப்பதற்காக ஒரு புதிய, ஒருங்கிணைக்கப்பட்ட வழியை அறிமுகப்படுத்துகிறது.
டோமோதெரபி சிகிச்சையொன்றை ஆரம்பிக்க முன்பு ஒன்றிணைக்கப்பட்ட ஸ்கேனிங் தொழினுட்பங்களையும் (CT மற்றும் MRI) ஒவ்வொரு சிகிச்சை கொள்ளளவுக்குமான திருத்தமான நிலைகளை உருவாக்க மற்றும் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய பகுதிகள் (உணர்ச்சிகரமான பாகங்கள் அல்லது கட்டமைப்புகள்) தொடர்பாக விசேட மென்பொருளை மருத்துவர் பயன்படுத்துவார். பின்பு கட்டிக்கு எந்தளவு கதிரியக்கம் தேவை என்பதை மருத்துவர் கணிப்பார், சுற்றியுள்ள அமைப்புகளுக்கான அனுமதித்தல் மட்டங்களும் கணிக்கப்படும். மருத்துவரது விபரக்குறிப்பை முடிந்தவரை ஈடுசெய்யும் விதமாக, விநியோகிக்கப்படும் கதிரியக்க கற்றையின் உரிய வடிவம், நிலை மற்றும் செறிவு என்பவற்றை டோமோதெரபி சிஸ்டம் கணிக்கும்.
சிகிச்சை வழங்கல் இயந்திரமாகவும் CT ஸ்கேனராகவும் தொழிற்படுவதனால், ஒவ்வொரு சிகிச்சையின் முன்பும் CT ஸ்கேன் ஒன்றை மேற்கொள்ள டோமோதெரபி சிஸ்டம் அனுமதிக்கும். ஸ்கேன் உதவியோடு, கட்டியின் இடத்தை உறுதிப்படுத்த முடிவதோடு, அவசியமெனின், கதிரியக்கம் சரியான இடத்தை அடைவதற்கு உதவியாக நோயாளரின் நிலை மாற்றப்படும்.
டோமோதெரபி சிஸ்டம் சுருளி வடிவத்தில் (TomoHelical) அல்லது உயர்த்தப்பட்ட கோண வடிவத்தில் (TomoDirect) கதிரியக்கச் சிகிச்சையை வழங்குகின்றது. linear accelerator இனால் போட்டோன் கதிரியக்கம் உற்பத்தியாக்கப்படுவதோடு, இது நோயாளரை சுற்றி இயங்கி கதிரியக்கத்தை சீராக்கும் multi-leaf collimator என்ற கருவியுடன் ஒத்திசைந்து செயற்படுகின்றது. அதேவேளை நோயாளரின் இருக்கையும் மெதுவாக வளையத்தின் மையப் பகுதிக்கு நகர்கிறது.