X

டோமோதெரபி இன்று உலகில் காணப்படும் அதிக முன்னேற்றகரமான புற்றுநோய் சிகிச்சை வடிவமாகும்.

அதிநவீன தொழினுட்பம் பயன்படுத்தப்படும் டோமோதெரபி இன்று உலகில் காணப்படும் அதிக முன்னேற்றகரமான புற்றுநோய் சிகிச்சை வடிவம் என்பதோடு நோயாளர்களுக்கு மிகத் திருத்தமான துல்லியமான சிகிச்சையைப் பெற்றுத் தருகின்றது.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

கதிரியக்க சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளர்களின் உயிர் பிழைத்தல் வீதத்தை டோமோதெரபி முன்னேற்றுமா?

கதிரியக்க சிகிச்சைகளின் அனைத்து புதிய அபிவிருத்திகளினதும் நோக்கம் அதுவே. விநியோகத்தை மேலும் துல்லியமாக்குதல், கதிரியக்கத்தின் கொள்ளளவை மேலும் நுணுக்கமாக சீராக்குதல் என்பவற்றின் மூலமாக கதிரியக்க சிகிச்சையின் பிரதிகூலமான விளைவுகள் குறைக்கப்படுவதோடு, நோயாளருக்கு சிகிச்சையை இலகுவாக்கிட முடியும்.

linear accelerator ஒன்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சையுடன் ஒப்பிடும்போது டோமோதெரபிக்கு எவ்வளவு மேலதிக செலவு ஏற்படும்?

கட்டியின் அமைவிடம் மற்றும் அளவு, அத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப்படும் நேரம் என்பவற்றிலேயே செலவுகள் தங்கியுள்ளன. ஆகவே ஒரு கட்டியை நீக்குவதற்காக பயன்படுத்தப்படும் வெவ்வெறு கதிரியக்க முறைகளின் செலவுகளை ஒப்பிடுவது கடினமானது.

CHSL கொண்டுள்ள டோமோதெரபி கருவி என்ன?

தற்பொழுது உள்ள டோமோதெரபி இயந்திரமானது டோமோதெரபி துறையில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் இருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் Accuray Inc. இனது சமீபத்திய TomoHDtreatment சிஸ்டமாகும்.

தற்பொழுது இலங்கையில் கிடைக்கும் கதிரியக்க சிகிச்சைகளில் டோமோதெரபி என்னென்ன வழிமுறைகளில் முன்னேற்றகரமானது?

டோமோதெரபி வழிமுறையானது TomoHelical என அழைக்கப்படும் சுருளி விநியோக வடிவத்தில் அல்லது TomoDirect என அறியப்படும் தனித்த கோண முறைமையில் கதிரியக்க சிகிச்சையை விநியோகிக்கின்றது. linear accelerator ஒன்றினால் போட்டோன் கதிரியக்கம் உற்பத்தி செய்யப்பட்டு, நோயாளரை சுற்றிலும் பயணிப்பதோடு, கற்றையை ஒருங்கமைக்கும் கருவியான multi-leaf collimator உடன் ஒத்திசைவாக அசைகின்றது. அதேவேளை, இருக்கையும் அசைந்து, வளையத்தின் நடுப்பகுதிக்கு நோயாளரை மெதுவாக செலுத்தி வழிநடத்துகின்றது. இம் முறையினால், வேறு எவ்வித கதிரியக்க சிகிச்சை முறைகளாலும் அணுக முடியாத இடங்களிலுள்ள கட்டிகளுக்கு டோமோதெரபி மூலம் கதிரியக்கத்தை செலுத்த முடியும்.

இத்தகைய முன்னேற்றங்கள் நோயாளருக்கு எவ்வாறு நன்மை அளிக்கின்றன?

CT மற்றும் MRI ஆகிய ஸ்கேனிங் தொழினுட்பங்களின் இணைப்பைப் பயன்படுத்தி பெறப்படும் முப்பரிமாண படங்கள் மற்றும் ஒவ்வொரு சிகிச்சை கொள்ளளவுக்கும் திருத்தமான தரவுகளை வழங்கும் விசேட மென்பொருள் என்பவற்றை மருத்துவர் பயன்படுத்துவதனால், உணர்ச்சிகரமான பாகங்கள் அல்லது அமைப்புகளுக்கான ஆபத்தைக் குறைத்து சுற்றியுள்ள இழையங்களுக்கான சேதத்தை டோமோதெரபி குறைக்கிறது. சிகிச்சை விநியோக இயந்திரமாகவும் CT ஸ்கேனராகவும் இருப்பதனால், ஒவ்வொரு சிகிச்சைக்கு முன்னதாகவும் CT ஸ்கேன் ஒன்றை மேற்கொள்ள மருத்துவருக்கு அனுமதியளிக்கிறது. நோயாளரின் உடற்கூற்றியல் ஒவ்வொரு நாளும் மாறுவதனால் இது முக்கியமானது. பட வழிகாட்டல் கதிரியக்க சிகிச்சையின் காரணமாக கட்டிகளின் அசைவு அல்லது சுருக்கம், நிறை குறைவு மற்றும் ஏனைய மாற்றங்களுக்கு அனுமதிக்கும் உடனடி சரிபார்த்தல்களை மருத்துவர்கள் மேற்கொள்ள முடிகின்றது.

நோயாளர்கள் பெற்றுக்கொள்ளும் இன்னுமொரு நன்மை, குறைந்தளவு சிகிச்சை நேரமாகும். டோமோதெரபி CT ஸ்கேன் அல்லது X-ray ஒன்றை எடுப்பது போல வலியற்றது. அத்துடன் ஒரு நாளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.

இச்சிகிச்சையின் மூலம் எவ்வகையான புற்றுநோய்கள் குணப்படுத்தப்படலாம்?

உடலின் எப்பகுதியிலுமுள்ள புற்றுநோயை குணமாக்க டோமோதெரபி பயன்படுத்தப்படலாம். எனினும், இச்சிகிச்சை முன்னிற்கும் சுரப்பி புற்று, மூளைக் கட்டிகள், தலை மற்றும் கழுத்து, கணையம், மார்பகம், ஈரல், குதம் மற்றும் மலக்குடல் புற்று என்பவற்றுக்கு விசேடமானது. இலக்கு வைத்தலில் இது வழங்கிடும் துல்லியம் மற்றும் விநியோகிக்கப்படும் கதிர்வீச்சின் சீராக்கம் என்பவற்றின் மூலமாக மிகச்சிறிய கட்டிகளுக்கும் துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சையை டோமோதெரபியால் வழங்க முடியும்.

டோமோதெரபி என்றால் என்ன?

டோமோதெரபி என்பது புற்றுநோய்க் கலங்களை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கதிரியக்க சிகிச்சையின் முன்னேற்றகரமான வடிவமாகும். நுட்பமான கருவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ் அதிநவீன தொழினுட்பத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட, சிறப்பாக விருத்தி செய்யப்பட்ட முப்பரிமாண படங்களின் வழிகாட்டலுடனான கதிரியக்க சிகிச்சையின் மூலம் கட்டிகளை மிகத் துல்லியமாக இலக்கு வைக்க முடிகின்றது.

logo