இதன் எளிய தன்மைக்காக கதிர்ச்செயற்பாட்டு அயடின் (RAI) ஆனது hyperthyroidism (அதிசெயற்பாட்டு தைரோய்ட்) இனது சிகிச்சைக்காகத் தெரிவு செய்யப்படுகின்றது: இதனை ஒற்றை சிகிச்சை வேளையில் கொடுக்க முடியும். RAI குறைவான அல்லது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
RAI ஆனது மீன், கடற்பாசி மற்றும் அயடின் சேர்க்கப்பட்ட உணவில் இருக்கும் அயடினை ஒத்ததாக இருந்தாலும் நோயைக் குணமாக்கும் விளைவை உருவாக்கும் இலத்திரன் அல்லது பீட்டா துணிக்கையை வெளியேற்றுவதில் வேறுபடுகின்றது. இந்த சிகிச்சையில், தைரொயிட் ஆனது அயடினை விரைவாகப் பெற்றுக்கொண்டு, வழமையான உடல் இயக்கங்களுக்கு அவசியமான தைரொய்ட் ஹோர்மோன்களை உற்பத்தியாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.
RAI நீரில் கரையும் கெப்சியூல் ஒன்றாக வழங்கப்படுவதோடு, இறைப்பை மற்றும் குடலினால் மிக விரைவாக அகத்துறிஞ்சப்படுகின்றது. இது பின்னர் இரத்த ஓட்டத்தினால் தைரொய்ட்டுக்கு கொண்டு செல்லப்படுவதோடு, இங்கு சில தைரோய்ட் கலங்களின் செயற்பாட்டை RAI தடுப்பதோடு, அதிக கதிர் செயற்பாட்டு அயடினுடன் அதிகளவு கலங்கள் செயற்பாட்டை நிறுத்தும். மேலதிக தைரொய்ட் ஹோர்மோன்கள் மேலும் உற்பததி செய்யப்படாது hyperthyroidism இனது அறிகுறிகள் மறையும்.
RAI சிகிச்சை சில பக்கவிளைவுகளை கொண்டிருப்பதோடு இவை கிரமமற்று நிகழும்:
| பக்க விளைவுகள் | சிகிச்சைகள் |
|---|---|
| RAI சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் தொண்டை நோவு | Acetaminophen |
| உமிழ்நீர் சுரப்பிகளின் வீக்கம் | கடினமான இனிப்புகளை சில நாட்கள் உறிஞ்சுங்கள் |
| சிறிதளவு குமட்டல் | அயடின் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் இரு மணித்தியாலங்கள் உணவைத் தவிருங்கள் |
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முகங்கொடுக்கும் கதிரியக்கத்தின் அளவைக் குறைப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமானவை. ஏனெனில் சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் வரையில் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள RAI இலிருந்து சிறியளவு கதிரியக்கம் வெளிப்படும்.