X

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் புற்றுநோய் சிகிச்சைக்கு பலதரப்பட்ட சிகிச்சை தெரிவுகளை வழங்குகிறது.

நாம் பலதரப்பட்ட சிகிச்சைகளை வழங்குவதனால், நோயாளர் தமது வகை மற்றும் வடிவத்துக்கு பொருத்தமான சிகிச்சையை பெறலாம்.

IMRT வசதியுடன் முன்னேற்றகரமான Linear Accelerator

முன்னேற்றகரமான கதிரியக்க புற்றுநோயியல் தொழினுட்பமான, செறிவு சீராக்கல் ரேடியோதெரபியுடன் (IMRT) இணைந்த புதிய அதிநவீன linear accelerator ஆனது இலங்கையின் கதிரியக்க சிகிச்சையில், செலிங்கோ ஹெல்த் கெயார் சென்டர் இனது கதிரியக்க சிகிச்சை பிரிவை முன்னிலையில் வைத்துள்ளது.

Varian Medical Systems இனால் உருவாக்கப்பட்ட Varian Clinac iX linear accelerator ஆனது உலகில் மிகவும் நிலையான மற்றும் நிரூபிக்கப்பட்ட இயந்திரமாகும். இது உலகெங்கும் 5000 க்கு மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

Varian Clinac iX linear accelerator துணையோடு இப்பொழுது செலிங்கொ ஹெல்த்யொர் சென்டரிலுள்ள நோயாளர்களுக்கு கட்டிகளை சரியாக இலக்கு வைக்க முடிவதனால் அதிக கொள்ளளவு கதிரியக்க சிகிச்சையை பாதுகாப்பாக பெற முடிவதோடு, சில சந்தர்ப்பங்களில் சிகிச்சைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் முடியும்.

 

 

மேம்படுத்தப்பட்ட துல்லியம்

நுட்பமான உள்ளக கணனி வலையமைப்பு சிகிச்சைத் திட்டமிடல் ஆனது பௌதிகவியல், மற்றும் CT (Computerized Tomography) கதிரியக்க புற்றுநோயியல் என்பவற்றை தொடர்புபடுத்துவதோடு, கதிரியக்க புற்றுநோயியலாளர் மிகப் பயனுறுதிமிக்க மிகத் துல்லியமான சிகிச்சையை திட்டமிடவும் உதவுகிறது. சிகிச்சைக்கு அனுமதி பெறப்பட்டதும், தகவல்கள் linear accelerator க்கு அனுப்பப்படும். பின்பு முப்பரிமாண multi-leaf system இல் உள்ள தன்னியக்க தலைமை தடைகளை தொழினுட்பவியலாளர்கள் வழிநடத்துவர்.

Primus accelerator ஆனது பட ஒருங்கமைப்புக்கு உதவுவதோடு இதனால் அதிக செலவு தவிர்க்கப்படும். ஒரு தகவல் சேமிப்பகம் அனைத்து தரவுகளையும் பதிவு செய்து, கண்காணித்து மதிப்பீடுகளை மேற்கொள்ளும்.
இவ் இயந்திரமானது தடைகளை உருவாக்கும் செயன்முறையை நீக்குவது மட்டுமில்லாமல் ஊழியர்களது வெளிப்பாடு மற்றும் பல மணித்தியால சிகிச்சை தயார்படுத்தலையும் குறைக்கிறது. மேம்படுத்தப்பட்ட தொழினுட்பம் மற்றும் 50% குறைந்த சிகிச்சை நேரம் ஆகிய இரு நன்மைகளையும் நோயாளர்கள் அனுபவிக்கின்றனர்.

 

முன்பு

முன்னைய கதிரியக்க சிகிச்சைகளுக்கு உள்ளாகும் ஒரு நோயாளர் தொடர்பாக முதன்மை தடைகள் இணைக்கப்படும். இது அவசியமற்ற கதிரியக்கத்திலிருந்து நலமான இழையத்தைப் பாதுகாக்கும். சிகிச்சையளிக்கப்படும் வெவ்வேறு இடங்கள் தொடர்பாக தொழினுட்பவியலாளர்கள் மூலமாக சிரமத்துடனும் தனிப்பட்ட ரீதியிலும் தடைகள் உருவாக்கப்படும். இதன்போது, நோயாளர்களுக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட முன்னதாகவே, தடைகளை மூடுவதற்காக மற்றும் அவற்றின் துல்லியத்தை சரிபார்ப்பதற்காக பல மணித்தியாலங்களை தொழினுட்பவியலாளர்கள் செலவிடுவது பொதுவான ஒன்றாகும். சிகிச்சை நேரத்தில், சிகிச்சையாளர்கள் அடிக்கடி உள்ளே சென்று தடைகளை மாற்றியமைத்து, நோயாளரை மீண்டும் சரி செய்வது நோயாளர் ஒருவருக்கான சிகிச்சை நேரத்தை அதிகரிக்கும் ஒரு செயன்முறையாகும்.
கணனி மயப்படுத்தப்பட்ட accelerator உதவியோடு, ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளருக்கும் கணனியை ஒருவர் நெறிப்படுத்துவதோடு, பின் அவரால் ஒவ்வொரு தடவையும் வேறு எவ்வித உள்ளீடுகளுமின்றி சிகிச்சையைத் தொடரலாம். இது துல்லியமற்ற தரவு உள்ளிடப்படுவதைத் தடுக்கிறது. எதேனும் தரவு வழங்கப்பட்டால் அது அனுமதிக்கப்பட்ட திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்படாது, மாறாக அழிக்கப்படும்.

 

IMRT இனது நன்மைகள்

IMRT ஆனது கற்றையின் திசையை மிகவும் நுணுக்காக சீர் செய்து கதிரியக்க சிகிச்சையை மேம்படுத்துகிறது. அதனால் சுற்றியுள்ள சாதாரண இழையம் கதிரியக்கத்தால் பாதிப்படையாது. அதிகளவு கதிர்வீச்சுக்கான இடங்கள், குறைந்தளவு கதிர்வீச்சுக்கான இடங்களை புற்றுநோயியலாளர்கள் தீர்மானிக்க முடிவதோடு, நம்பிக்கையுடன் கதிரியக்க அளவையும் அதிகரிக்க முடியும். பக்க விளைவுகளான சாதரண கலங்கள் பாதிப்படைதல் குறைக்கப்படும்.
IMRT தொழினுட்பமானது, கணைய புற்றுநோய் மற்றும் தலை, கழுத்து புற்றுநோய்களுக்கு முதற்தர கல்வி நிறுவகங்களில் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. எவ்வித பெரிய உறுப்பையும் பாதிக்காமல் கதிரியக்கத்தின் அளவை அதிகரிக்க முடிவதால் மார்பகப் புற்றுநோய் சிகிச்சையிலும் சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும்.
IMRT ஆனது கதிரியக்க புற்றுநோயியலில் ஒரு பாரிய முன்னேற்றமாகும். ஏனெனில் இச்சிகிச்சை அதுவரை கடினமாயிருந்த திருத்தமான கதிர்வீச்சு அளவை மேற்கொள்ள உதவுகின்றது. IMRT ஆனது கதிரியக்கப் புலத்தை நூற்றுக்கணக்கான சிறுபகுதிகளாக பிரிப்பதோடு, ஒவ்வொரு பகுதியின் உதவியோடும் வீச்சை கட்டுப்படுத்த உதவுகிறது. linear accelerator மற்றும் IMRT வசதி கொண்ட புதிய சிகிச்சை திட்டமிடல் சிஸ்டம் ஒன்றை கொண்டுள்ள ஆசியாவின் சில மருத்துவமனைகளில் நாமும் உள்ளோம் என்பது எமக்கு பெருமிதம் தருகின்றது.

 

logo