
இன்று உலகில் புற்றுநோய் தொடர்பாக காணப்படும் மிகவும் முன்னேற்றகரமான சிகிச்சையே டோமோதெரபி ஆகும்.
Read Moreஇன்று உலகில் புற்றுநோய் தொடர்பாக காணப்படும் மிகவும் முன்னேற்றகரமான சிகிச்சையே டோமோதெரபி ஆகும். கட்டிகளை இலக்கு வைக்கும் இத் தனித்துவமான முறையானது, புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக, ஒருங்கிணைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணத்தில் வடிவ படங்களால் வழிநடத்தப்படும் கதிரியக்க சிகிச்சையாகும். இந்த சிகிச்சையில் TomoHD அலகு மிகச்சிறிய கட்டிகளுக்கும் துல்லியமான கதிரியக்க சிகிச்சையை மேற்கொள்கின்றது. கட்டிகளை மிகச்சரியாக இலக்கு வைத்தல், நலமான இழையங்களுக்கு மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் சிகிச்சை நேரத்தை கணிசமாகக் குறைத்தல் என்பன கிடைக்கும் மேலதிக நலன்களாகும்.
டோமோதெரபி: டோமோதெரபி முறைமையானது சிகிச்சை இயந்திரத்துடன் CT ஸ்கேனரையும் கொண்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு முன்னர் CT ஸ்கேன் ஒன்றை மேற்கொள்ளும் வசதி மருத்துவர்களுக்கு கிடைப்பதனால் அவர்களால் கட்டியின் அமைவிடத்தை சரிபார்க்க முடிவதோடு, நோயாளரின் நிலையையும் உறுதி செய்துகொள்ள முடியும். டோமோதெரபி சிகிச்சை முறைமை சுருளி வடிவத்தில் (TomoHelical) அல்லது உயர்த்தப்பட்ட கோண முறையில் (TomoDirect) கதிரியக்க சிகிச்சையை அளிக்கின்றது. நோயாளர் சாயும் இருக்கையும் அசைவதோடு நோயாளரை மெதுவாக வளையத்தின் நடுப்பகுதிக்கு வழிநடத்தும். உடல் முழுவதுமுள்ள புற்றுநோயைக் குணப்படுத்த டோமோதெரபி பயன்பட்டாலும், குழந்தைகளின் புற்று, தலை மற்றும் கழுத்து, முன்னிற்கும் சுரப்பி, இடது பக்க மார்பகப் புற்று மற்றும் குதம் மற்றும் மலக்குடல் புற்றுக்கு விசேடமாக பயனுறுதி மிக்கது.

டோமோதெரபி நிலையத்தில் சிகிச்சை மற்றும் நோயாளரின் பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் ஆனது சமீபத்திய, அதிநவீனமான அசைவின்மைக்கு உதவும் உபகரணங்கள் மற்றும் Stereotactic Body Radiation Therapy (SBRT) பக்கேஜில் முதலீடு செய்துள்ளது.
Read Moreடோமோதெரபி நிலையத்தில் சிகிச்சை மற்றும் நோயாளரின் பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் ஆனது சமீபத்திய, அதிநவீனமான அசைவின்மைக்கு உதவும் உபகரணங்கள் மற்றும் Stereotactic Body Radiation Therapy (SBRT) பக்கேஜில் முதலீடு செய்துள்ளது. அசைவின்மைக்கு உதவும் உபகரணம் புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்காற்றுகின்றது, சிகிச்சைக்கு முன்பதாக புற்றுநோயாளரை சரி செய்வதற்கு எடுக்கும் நேரத்தை குறைப்பதோடு, மிகத் திருத்தமான நிலைப்படுத்தலை உறுதி செய்கிறது. இது கட்டிகளை நோக்கி கதிர்வீச்சை செலுத்தும்போது அடையப்படும் துல்லியத்தை அதிகரிக்கிறது. அசைவின்மைக்கு உதவும் உபகரணங்களில், தலை மற்றும் மூளை, மற்றும் கழுத்து சிகிச்சைகளுக்கு அதிசிறந்த அசைவின்மையை வழங்கும் கழுத்து மற்றும் தலைப் பகுதிக்கான கருவி, இலகுவான மற்றும் துல்லிமான நிலைப்படுத்தலை கணைய புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு பெற்றத்தரும் இடுப்புக்கான கருவி மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு திருத்தமான நாளாந்த நிலைப்படுத்தல் மற்றம் மார்பகத்தின் வீழ்ச்சியைத் தடுக்கும் மார்பகப் பலகை சிஸ்டம் என்பன அடங்கும். Stereotactic Radio Surgery (SRS) immobilization எனும் ஒரு கருவியானது சிறிய மூளைக் கட்டிகளையும் மற்றும் அடிவயிறு மற்றும் இடுப்பு அசைவின்மை கருவியானது சுவாசப்பை, அடிவயிறு மற்றும் இடுப்பிலுள்ள சிறிய முதல் நடுத்தரவு கட்டிகளுக்கான Stereotactic Body Radiation சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும்.

எமது கதிரியக்க சிகிச்சை பிரிவின் CT Simulation மற்றும் சிகிச்சை திட்டம் இப்பொழுது தமது புதிய CT Simulator உதவியோடு புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மேலும் முன்னேறியுள்ளது.
Read Moreஎமது கதிரியக்க சிகிச்சை பிரிவின் CT Simulation மற்றும் சிகிச்சை திட்டம் இப்பொழுது தமது புதிய CT Simulator உதவியோடு புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மேலும் முன்னேறியுள்ளது. CT Simulation ஆனது புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க துறையில் சமீபத்திய முன்னேற்றமாகும். அத்துடன் இதனை செலிங்கொ ஹெல்த்கெயாரின் கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். CT Simulation முப்பரிமாண தொழினுட்பத்தின் சமீபத்திய விடயங்களை நோயாளரின் கட்டியை வரையறுக்க, மற்றும் மீளுருவாக்க உதவுகின்றது. இச் செயன்முறையானது கட்டியை அதனை சூழவுள்ள இழையங்களுடன் சேர்த்து அடையாளம் காண்பதோடு, இதன் மூலம் ஒவ்வொரு நோயாளரதும் தரவுகளுக்கு அமைவாக அதிசிறந்த சிகிச்சையை கதிரியக்க சிகிச்சையாளர் வடிவமைக்க உதவுகிறது. இதன் மூலமாக கதிரியக்க சிகிச்சையாளரால் அதி துல்லியமாக சிகிச்சை ஆள்கூறுகளை வரையறுக்கலாம். இச்செயன்முறைக்கு CT Simulator இன்றியமையாத ஒன்றாகும். இது பலதரப்பட்ட காரணிகளால் பாரம்பரிய CAT ஸ்கேன் ஒன்றிலிருந்து வேறுபடுகின்றது. ஒரு தொகை உள்ளக மற்றும் வெளியக லேசர்கள் சிகிச்சை மேசையில் நோயாளரின் திருத்தமான நிலையை உறுதி செய்யும். நோயாளரின் உள்ளக உடற்கூற்றுத் தரவுகள் மற்றும் கட்டியுடன் தொடர்புபட்டதாக சிறிய தோல் சுட்டிகள் அமையும். Simulator இனது மேசை நிலை மிகத்திருத்தமாக குறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுவதோடு, மிகத்திருத்தமாக அதே அமைப்பு 5 - 8 வாரங்களுக்கு அதிகமாக ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும். இவ் அனைத்து தகவல்களும் ஒரு முப்பரிமாண திட்டமிடல் கணனிக்கும் மற்றும் சிகிச்சை இயந்திரமான linear accelerator க்கும் மாற்றப்படும். நாளாந்த சிகிச்சைகளின் துல்லியத்தை உறுதிப்படுத்த பல சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படும். CT Simulator நோயாளர் நிலையத்தில் இருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. ஒரு நோயாளர் 3 - 5 நிமிடங்களில் முழுமையான ஒரு CT ஸ்கேனை மேற்கொள்ள உதவுகிறது. இதே இயந்திரம் பிரதியாக்கப்பட்ட தரவுகளை உயர் சக்தி கதிரியக்க சிகிச்சைக்காக வழங்குகின்றது. ஒரு நோயாளர் சிகிச்சை விநியோகத்துக்கான நாள் ஒன்றை ஒதுக்கிக்கொள்ள முடியும். இத்தொழினுட்பத்தின் பக்க பலத்துடன் எமது நோயாளர்களுக்கு அதிசிறந்த துல்லியமான சிகிச்சையைப் பெற்றுத்தர முடிவதனால் நாம் நிம்மதியடைய முடியும்.