செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் அதிநவீன வசதிகளின் துணையைக் கொண்டிருப்பதோடு, சிறப்பு நீரிழிவு ஆலோசகர் மற்றும் ஏனைய ஆலோசகர்களால் வழிநடத்தப்படும் அதிசிறந்த அனுபவமிக்க அணியினரின் சேவையை, ஓய்வான மற்றும் மருத்துவமனையிலிருந்து வேறுபட்ட சௌகரியமான சூழலில் பெற்றுத் தருகின்றது.
உங்களுக்கு நீரிழிவு இருப்பின் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று உங்கள் பாதங்களை கவனமாகப் பராமரிப்பதாகும்.
Tஉங்களுக்கு நீரிழிவு இருப்பின் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று உங்கள் பாதங்களை கவனமாகப் பராமரிப்பதாகும். ஏனெனில், பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான மருத்துவ அனுமதியில் கிட்டத்தட்ட 20% நீரிழிவு நோயாளர்களுக்கு உரியது. உலகளாவிய ரீதியிலும் அதேவேளை இலங்கையிலும் நீரிழிவால் ஏற்படும் பாதப் புண்ணானது உடலின் கீழ் பாகங்களை நீக்குவதற்கான பொதுவான காரணியாக உள்ளது.
ஏனையோரை விடவும் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏன் அடிக்கடி பாதத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன?
நீரிழிவின் நோய் செயன்முறையானது பாதங்களை பல வழிகளில் பாதிக்கிறது.
நீங்கள் நீரிழிவு நோயாளராக இருந்தால் உங்கள் பாதங்களை பராமரிப்பது எவ்வாறு?
நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளராக இருந்தால், உங்களது பாதங்கள் உங்கள் முகத்தைவிட முக்கியமானவை. ஒவ்வொரு சந்திப்பின் போதும் உங்கள் பாதங்களை மருத்துவருக்கு காட்டுங்கள். மருத்துவ சோதனையின்போது, மருத்துவர் உங்கள் பாதங்களை அவதானிப்பதற்காக காலுறைகளை கழற்றுவதை உறுதி செய்யுங்கள்.
ஆகவே உங்கள் பாதங்களை கவனமாகப் பராமரியுங்கள். நீரிழிவு இருக்கும்போது உங்கள் பாதங்கள் வழமையானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிகத்திருத்தமான பாதங்களுடன் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை பொருட்படுத்தாவிட்டால் நிகரான, சிறந்த மாற்று ஒன்றை ஒருபோதும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியாது.
நீரிழிவு உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கண் பிரச்சினைகள் ஏற்பட அதிக இடமுண்டு. இந்நிலமைகள் தீவிரமான பார்வை குறைபாடு அல்லது நிரந்தர பார்வையின்மையை ஏற்படுத்தலாம்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கண் பிரச்சினைகள் ஏற்பட அதிக இடமுண்டு. இந்நிலமைகள் தீவிரமான பார்வை குறைபாடு அல்லது நிரந்தர பார்வையின்மையை ஏற்படுத்தலாம்.
நீரிழிவில் கண் நோய்கள்:
கண் புரை நோய்
இது கண் வில்லையில் ஏற்படும் புரை வளர்ச்சியாகும். நீரிழிவு உள்ளவர்களுக்கு சற்று முந்தைய வயதிலேயே கண் புரை நோய் உருவாகின்றது.
கண் அழுத்த நோய்
கண்ணின் உள்ளே காணப்படும் திரவத்தின் அழுத்தத்தை அதிகரிக்கிறது, அது கட்புலன் நரம்பின் பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும் இட்டுச் செல்லும். ஏனையோருடன் ஒப்பிடும்போது நீரிழிவு உள்ள ஒருவருக்கு இந்நிலமை ஏற்படுவதற்கு இரு மடங்கு வாய்ப்புண்டு.
நீரிழிவு விழித்திரை நோய்
இதுவே அதிக பொதுவான நீரிழிவு கண் நோயாகவும் வயது வந்தவர்களது கண்பார்வை இழப்புக்கு பிரதான காரணியாகவும் உள்ளது. இது விழித்திரையிலுள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உருவாகின்றது. விழித்திரை என்பது கண்ணின் பிற்பகுதியில் அமைந்துள்ள ஒளியை உணரக்கூடிய படலம் ஆகும். நீரிழிவு விழித்திரை நோயில் பல்வேறு கட்டங்கள் காணப்படுகின்றன. அவை:
பின்புல நீரிழிவு விழித்திரை நோய்
விழித்திரையிலுள்ள இரத்த நாளங்கள் சேதமடையும்போது, அவை திரவக் கசிவை அல்லது இரத்தக் கசிவை ஏற்படுத்தும். இது விழித்திரையில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு exudates எனப்படும் படிவுகளை உருவாக்கும்.
துரிதவளர்ச்சி நீரிழிவு விழித்திரை நோய்
இது விழித்திரை நோயின் தீவிர கட்டமாகும். விழித்திரை நோய் அதிகரிக்கும்போது விழித்திரையிலுள்ள இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது புதிய குருதிக் கலங்களை உருவாக்குவதற்கு காரணமாகும். இப்புதிய கலங்கள் மிகவும் நலிவாக இருப்பதோடு இலகுவாக இரத்தத்தை கசியச் செய்யும்.
விரிவான கண் பரிசோதனையில் விழித்திரை நோய் இனங்காணப்படுவதோடு அதில் இவை உள்ளடங்கும்.
கண் அட்டவணை பரிசோதனை உங்களது தூரப்பார்வையை பரிசோதிக்கிறது
நீரிழிவு நோயாளர்களுக்கு, அவர்கள் நோயின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தாலும், முழுமையான பாத பராமரிப்பு மற்றும் பாதக் கோளாறுகளுக்கான சிகிச்சையில் திருத்தமான பாதணிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நீரிழிவுக்கு உள்ளான ஒருவர் சரியான பாதணிகளை அணிதல் வேண்டும்.
நீரிழிவு நோயாளர்களுக்கு, அவர்கள் நோயின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தாலும், முழுமையான பாத பராமரிப்பு மற்றும் பாதக் கோளாறுகளுக்கான சிகிச்சையில் திருத்தமான பாதணிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நீரிழிவுக்கு உள்ளான ஒருவர் சரியான பாதணிகளை அணிதல் வேண்டும். நீரிழிவு நோயாளர்களுக்கான சாதாரண காலணிகளுடன் ஒப்பிடும்போது சிறப்பு பாதணிகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இவ் விசேட பாதணிகள் கால் விரல்களை உள்ளடக்குவதற்கு போதுமான இடத்தை கொண்டவை, வழுக்காதவை மற்றும் மிருதுவான திண்டு வைக்கப்பட்ட உட்பகுதியைக் கொண்டவை. நரம்புக்கோளாறு பற்றிய ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால், அல்லது உணர்ச்சிக் குறைபாடு இருப்பின் சரியான பாதணிகளை அணிவது மிக முக்கியமானது.
தவறான வகை அல்லது பொருத்தமற்ற காலணிகளினால் ஏற்படும் மேலதிக அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக கொப்புளங்கள், தடித்த தோல், ஆணிகள் அல்லது பாதப் புண்கள் ஏற்படலாம். இது உணர்ச்சியற்ற பாதத்தில் மட்டுமல்லாது, இரு பாதங்களிலும் நரம்புக் கோளாறின் அறிகுறி ஏதுமின்றி ஏற்படலாம். விசேட பாதணிகளை அணிவதன் மூலமாக இவ்வாறான பல தீவிர நீரிழிவு பாத கோளாறுகளை நீரிழிவு நோயாளர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். அத்துடன் சரியான வகை காலணியை, பொருத்தமான அளவில் வாங்குவதற்கு நோயாளர்கள் கற்றுக்கொள்வதும் முக்கியமானது, அதன் மூலமாக எதிர்கால பிரச்சினைகள் தடுக்கப்படலாம்.
பாதத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மேலதிக அழுத்தம் காணப்பட்டால், அது சருமப் புண்கள், தடித்த தோல், ஆணிகள் மற்றும் பாதப் புண்கள் உருவாக காரணமாகலாம். நீரிழிவுக்கான பாதணிகள் இம் மேலதிக அழுத்தத்தில் காணப்படும் இடங்களை விடுவிக்க உதவி, அதன் மூலமாக நீரிழிவு தொடர்பான பாதப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைக்கும்.
பாதணியின் அடி மீதான மொத்த அழுத்தம் மற்றும் பாதத்தின் அடிப்பகுதி மீதான அதிர்ச்சியை விசேட பாதணிகள் குறைக்கின்றன.
உறுப்பு விகாரமானது charcot ஈடுபாடு, பெருவிரல் முட்டி, கொழுப்பு இழையத்தின் இழப்பு, சம்மட்டி விரல்கள் மற்றும் உறுப்பு நீக்கங்கள் போன்ற நிலைமைகள் காரணமாக ஏற்படலாம் என்பதோடு, வலியைக் குறைப்பதற்கும் மேலதிக சேதத்தை தவிர்ப்பதற்கும் நிலைப்படுத்துதல் முக்கியமானது.
ஆணிகள் அல்லது பாதப்புண் உள்ளவர்கள் எடை அகற்றல் உள்ளடிகளை அணிவதன் மூலமாக குணமாக்கற் செயற்பாட்டை மேம்படுத்த முடியும்.
கட்டமைக்கப்பட்ட பாதணிகள், பாதத்திலுள்ள சில இணைப்புகளின் அசைவுகளை மட்டுப்படுத்துவதோடு, அதன் மூலமாக எரிச்சல் குறைவடைந்து, வலிக்கு நிவாரணமளித்து, அதிக நிலையான மற்றும் செயற்படும் பாதத்தை அடைய உதவுகிறது. பாத விகாரம் உள்ளவர்கள் மற்றும் கீழ் உறுப்புகள் நீக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பாதத்தின் அளவு மற்றும் வடிவத்துக்கேற்ப விசேடமாக கட்டமைக்கப்பட்ட பாதணிகளை அணிதல் வேண்டும்.
ஓர்தோடிக்ஸ் என்பது பாதத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அறுவை சிகிச்சையின்றி தீர்ப்பதற்காக அணியப்படும் சாதனங்கள் ஆகும். அவற்றில் சிலிக்கன் ஜெல் உள்ளடிகள், குதிகால் திண்டுகள், விரல் வேறாக்கிகள், முன்பாத திண்டுகள், விரல் காப்பான்கள் மற்றும் வளைந்த ஏந்திகள் என்பன உள்ளடங்கும். பாத விகாரத்தின் வகைக்கு ஏற்றவாறு ஓர்தோடிக்ஸ் சரியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
நீரிழிவு ஒரு சிதைவடையச் செய்யும் நோய் என்பதால், நோய் இனங்காணப்பட்ட நாளில் இருந்து இரத்தத்தின் சர்க்கரை மட்டம் குறித்து கட்டுப்பாடான அளவீடுகளை எடுப்பது முக்கியமானது.
நீரிழிவு ஒரு சிதைவடையச் செய்யும் நோய் என்பதால், நோய் இனங்காணப்பட்ட நாளில் இருந்து இரத்தத்தின் சர்க்கரை மட்டம் குறித்து கட்டுப்பாடான அளவீடுகளை எடுப்பது முக்கியமானது. நீரிழிவு நோயாளர்களுக்கு அவர்களது மருந்துகளுக்கு மேலதிகமாக தொடர்ச்சியான உடற்பயிற்சி செயற்பாடுகள் மற்றும் சரியான உணவுப்பழக்க கட்டுப்பாடு என்பவை அதிகளவு பரிந்துரைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் ஒருவரது உடலின் அனைத்து பாகங்களையும் நீரிழிவு பாதிப்பதனால், தொடர்ச்சியான உடற்பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் சரியான உணவுப் பழக்கம் என்பன நாளாந்த வாழ்க்கையில் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது. அது நீடித்த காலத்தில் நீரிழிவின் பிரச்சினைகள் உடற் பாகங்களை பாதிப்பதை தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளர்களுக்கான உணவுப் பழக்கம் என்று ஒன்றில்லை. நீரிழிவுக்கு உள்ளான ஒவ்வொருவரும் தமக்கு பொருத்தமான உணவுகள் பற்றியும் அவரது மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் பற்றியும் அவதானத்துடன் இருத்தல் வேண்டும்.
நீரிழிவு நோயாளர்களுக்கான உணவுப் பழக்கங்கள் பற்றிய முக்கிய அறிவுறுத்தல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அடிக்கடி எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் வருமாறு:
அடிக்கடி உட்கொள்ளக் கூடாத அல்லது தவிர்க்க வேண்டிய உணவுகளாவன:
மேற்குறிப்பிட்டவை பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. எனினும், ஒருவரது மருத்துவ நிலைமைகள், உடல் நிறை மற்றும் உடற் செயற்பாட்டு மட்டங்கள் என்பவற்றுக்கு அமைவாக பரிந்துரைகள் வேறுபடலாம்.
உங்களது மருத்துவ நிலைமைகள், உணவு விருப்பங்கள், கிடைக்கும் உணவுகள், அணுகுதன்மை, தயாரிப்பு மற்றும் உங்கள் உடற் செயற்பாட்டு மட்டம் பற்றி உங்களது உணவு ஆலோசகர் அல்லது போஷாக்கு ஆலோசகருடன் கலந்துரையாடி உங்களுக்கான தனிப்பட்ட ஒரு உணவுத் திட்டத்தை பெற்றுக்கொள்ளுதல் சிறந்தது.
செலிங்கோ ஹெல்த் ஆய்வுகூடத்தின் ஊழியர்கள் எமது வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புகளை திருப்தி செய்யும் விதமாக உயர்தரமான மதீப்பீட்டுடன் கூடிய மருத்துவ நோயறிதல் சேவையை அர்ப்பணிப்புடன் பெற்றுத் தருகிறார்கள்.
செலிங்கோ ஹெல்த் ஆய்வுகூடத்தின் ஊழியர்கள் எமது வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புகளை திருப்தி செய்யும் விதமாக உயர்தரமான மதீப்பீட்டுடன் கூடிய மருத்துவ நோயறிதல் சேவையை அர்ப்பணிப்புடன் பெற்றுத் தருகிறார்கள். எமது ஆய்வுகூட சேவையில் நிபுணத்துவம் மற்றும் நெறிமுறை மதிப்புகளை நாம் ஈடுபாட்டோடு பின்பற்றுகின்றோம்.
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸ் ஆய்வுடத்திலுள்ள அனைத்து ஊழியர்களும் அதிகபட்ச வாடிக்கையாளர் திருப்தியை எட்டுவதற்கும், அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நியமங்களுக்கு ஒத்த சேவை மேம்பாட்டை அடைவதற்கும் கடுமையாக முயற்சிக்கிறார்கள். (சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்ப்பு, உதா: Bio –Red Laboratories EQAS USA)
எமது பலதரப்பட்ட ஆய்வுகூட சேவைகளில் இரத்தம், சிறுநீர், மலம் மற்றும் ஏனைய உடல் திரவங்கள் தொடர்பான வழமையான மற்றும் விசேட ஆய்வுகூட பரிசோதனைகள் உள்ளடங்கும். எமது சேவைகளின் தனித்துவமான அம்சமாக இருப்பது அநேகமான அறிக்கைகள் குறித்த அதே நாளில் வெளியிடப்படுவதாகும்.
உதா: HbA1C பகுப்பாய்வு, நீரிழிவை சோதிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு விசேட பரிசோதனை ஆகும். இதன் அறிக்கையை இரு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
பின்வரும் பரிசோதனைகள் எமது ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:
செலிங்கோ டயபெடீஸ் சென்டரிலுள்ள நீரிழிவு விற்பனையகம் நீரிழிவு தொடர்பான அனைத்து பொருட்களையும் கொண்டுள்ளது
செலிங்கோ டயபெடீஸ் சென்டரிலுள்ள நீரிழிவு விற்பனையகம் நீரிழிவு தொடர்பான அனைத்து பொருட்களையும் கொண்டுள்ளது:
நீரிழிவு விற்பனையகத்தின் மருந்தகம் உங்களது அனைத்து மருந்துசார் தேவைகளையும் நிறைவேற்றுவதோடு, தகைமையுள்ள நிபுணத்துவமான மருந்தாளரால் நிர்வகிக்கப்படுகிறது.
வயதானவர்கள் இடையே ஏற்படும் டிமென்ஷியா எனும் நோயின் ஆரம்ப அறிகுறியாக ஞாபகசக்தி குறைபாடு இருக்கலாம்.
வயதானவர்கள் இடையே ஏற்படும் டிமென்ஷியா எனும் நோயின் ஆரம்ப அறிகுறியாக ஞாபகசக்தி குறைபாடு இருக்கலாம். டிமென்ஷியா என்பது, நினைவுபடுத்தும், சிந்திக்கும் மற்றும் காரணம் கூறும் ஆற்றலை தொடர்ந்து குறைந்து செல்வதாகும். டிமென்ஷியா ஏற்பட பல்வேறு நோய்கள் காரணமாக அமையலாம். அதனால், உங்களது மருத்துவராலேயே அல்சைமர் நோயை வேறு வகை டிமென்ஷியாக்களில் இருந்து பிரித்தறிய முடியும். எனினும், டிமென்ஷியாவின் அறிகுறிகளை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும், அதனால் எப்பொழுது மருத்துவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உங்களால் தீர்மானிக்க முடியும். ஆரம்ப நடவடிக்கைகள் இந்நோயை முறையாக கையாள உதவும்.
உங்கள் பிரச்சினையை விளக்கும் கட்டத்தை அடையாளமிடுங்கள்
ஞாபகசக்தி குறைவு (நேர ஒதுக்கீட்டை மறத்தல், அண்மைய நிகழ்வுகள் அல்லது உரையாடல்களை நினைவுபடுத்த முடியாமை)
பொருட்களை இடம்மாறி வைத்துவிட்டு யாராவது திருடியிருப்பர்கள் என நினைத்தல்
தன்னிலை இழப்பு (பழக்கமற்ற இடங்களில் குழம்புதல், வருடம் அல்லது நேரம் தெரியாமை, வீடு திரும்பும் வழி தெரியாமை)
பேச்சு (எளிய, நன்கு தெரிந்த பொருட்களின் பெயர்களை மறத்தல், பொருத்தமற்ற வார்த்தைகளை பாவித்தல், வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லுதல்)
பொழுதுபோக்கு மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகளில் ஆர்வமிழத்தல், வழமையாக உங்களுக்கு மகிழ்ச்சியளித்த செயற்பாடுகளை கைவிடல்.
நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அல்லது குடும்பத்தினரை அடையாளம் காணல் (பேரப்பிள்ளைகள் யாரென மறத்தல், நண்பர்களை அந்நியமானவர்களாக நினைத்தல்)
சிக்கலான செயல்களை மேற்கொள்ளல் (சரிபார்ப்பு புத்தகம் வைத்திருத்தல், காசை எண்ணுதல், தொலைபேசியைப் பயன்படுத்தல்)
குளறுபடியான நடத்தை (உத்வேகமாக செயற்படல்)
மோசமான தனிப்பட்ட சுகாதாரம் (பற்துலக்க மறத்தல், மெதுவாக ஆடை அணிதல் அல்லது பொருத்தமற்ற ஆடைகளில் இருத்தல், குளிப்பதற்கு மறத்தல்)
மேற்குறிப்பிட்ட ஏதேனும் கட்டங்களில் நீங்கள் அடையாளமிட்டிருந்தால், டிமென்ஷியா அல்லது ஏனைய மருத்துவ பிரச்சினைகளுக்கு உள்ளாகும் சாத்தியம் உங்களுக்கு உண்டு.
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் +94112490290
ஆண் பாலியல் கோளாறுகள் பொதுவானவை, அதேவேளை அரிதாக பேசப்படுபவை.
ஆண் பாலியல் கோளாறுகள் பொதுவானவை, அதேவேளை அரிதாக பேசப்படுபவை. மன அழுத்தம், ஏக்கம் மற்றும் உளச்சோர்வு என்பன இதற்கான உளவியல் காரணிகளில் சில. ஆண்மைக்குறைவு மற்றும் அதனை ஒத்த பிரச்சினைகளுக்கும் முழு உடலையும் பாதிக்கும் நோய்கள் காரணமாக இருக்கலாம்.
ஆண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள்:
செலிங்கோ ஹெல்த்கெயார் சென்டரிலுள்ள ஆண்கள் கிளினிக், சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதோடு, ஆண்களின் பாலியல் குறைபாடு தொடர்பான சிகிச்சைக்கு விசேடமானது. அதிசிறந்த வசதிகள், மருத்துவ அணியினர் மற்றும் சேவைகளின் துணையை இந்த கிளினிக் கொண்டுள்ளது. மருத்துவமனை ஒன்றிலிருந்து வேறுபட்ட சூழல் நீங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதோடு, உங்கள் தனிப்பட்ட விடயங்கள் அனைத்து நேரங்களிலும் எமது தகைமை மிகுந்த நட்பான ஊழியர்களால் பாதுகாக்கப்படும்.
எமது சேவைகளில் உள்ளடங்குவன:
தரவுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
செலிங்கோ ஹெல்த்கெயார் சென்டர் ultrasound scans X-rays, mammograms மற்றும் ultra sound guided FNAC உட்பட பலதரப்பட்ட கதிர்வீச்சியல் சேவைகளை வழங்குகின்றது.
செலிங்கோ ஹெல்த்கெயார் சென்டர் ultrasound scans X-rays, mammograms மற்றும் ultra sound guided FNAC உட்பட பலதரப்பட்ட கதிர்வீச்சியல் சேவைகளை வழங்குகின்றது. இந்நிலையமானது அதிசிறந்த மற்றும் துல்லியமான சேவைகளைப் பெற்றுத்தர முற்றிலும் அண்மைய இயந்திரங்கள் மற்றும் தொழினுட்பங்களில் முதலீடு செய்துள்ளது.
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் முழுமையான புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சையை இயன் மருத்துவம் உள்ளடங்கலாக வழங்குகின்றது.
செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் முழுமையான புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சையை இயன் மருத்துவம் உள்ளடங்கலாக வழங்குகின்றது. இது அறுவை சிகிச்சை அல்லது விசேட சிகிச்சை ஒன்றிற்கு பின்னர் சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும். அனுபவமும் பொறுமையும் உள்ள இயன் மருத்துவ நிபுணர்களை நாம் கைவசம் கொண்டிருப்பதோடு, நோயாளர்கள் மீண்டும் வழமைக்கு வருவதற்கு உதவிட அவர்கள் மிகுந்த அன்புடன் உதவுகிறார்கள்.
Diabetes is a disease that is on the rise among people all over the world. The good news is, with treatment, a proper diet, exercise and proper management, most people with diabetes can lead normal lives. Click here to learn more about Diabetes, its causes, the types of Diabetes that are there today and many more.
Read More