X

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் பலதரப்பட்ட நீரிழிவு இனங்காணல் சோதனைகளை வழங்குகின்றது

உங்களுக்கு நீரிழிவு உள்ளதா அல்லது இல்லையா, அல்லது உருவாகும் ஆபத்து உள்ளதா என ஒரு அல்லது இரு எளிய சோதனைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ்

நீரிழிவு மற்றும் பாத பராமரிப்பு

Tஉங்களுக்கு நீரிழிவு இருப்பின் நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று உங்கள் பாதங்களை கவனமாகப் பராமரிப்பதாகும். ஏனெனில், பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான மருத்துவ அனுமதியில் கிட்டத்தட்ட 20% நீரிழிவு நோயாளர்களுக்கு உரியது. உலகளாவிய ரீதியிலும் அதேவேளை இலங்கையிலும் நீரிழிவால் ஏற்படும் பாதப் புண்ணானது உடலின் கீழ் பாகங்களை நீக்குவதற்கான பொதுவான காரணியாக உள்ளது.

ஏனையோரை விடவும் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏன் அடிக்கடி பாதத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன?

நீரிழிவின் நோய் செயன்முறையானது பாதங்களை பல வழிகளில் பாதிக்கிறது.

  1. நீரிழிவு நரம்பு சேதமாக்கலுக்கு (நரம்புக் கோளாறு) இட்டுச் செல்வதோடு தொடுகை, வலி மற்றும் வெப்பநிலை என்பவற்றுக்கான உணர்ச்சி வெளிப்பாட்டை இல்லாமலாக்கும். அதன் காரணமாக இனிமேல் நீங்கள் பாதிக்கப்பட்டால் வலியைக் கொண்டு அதனை உணர முடியாது.
  2. நீரிழிவு உடலின் கீழ் பாகங்களுக்கு விநியோகிக்கும் இரத்த நாளங்களை படிப்படியாக அடைத்து இரத்த ஓட்டத்தை குறைத்து பாதிப்பதோடு, அதன் காரணமாக சில ஊட்டப்பொருட்களே போஷாக்களிப்பதற்காக குறைந்தளவு ஒட்சிசனுடன் கால்களை அடையும். கால்களின் இந்த நிலைமை Peripheral Vascular Disease அல்லது PVD என அறியப்படும்.
  3. நீரிழிவு நோயாளர்களுக்கு, காயமான சருமம் மற்றும் இழையங்களின் இரண்டாம் நிலை தொற்றுகள் ஏற்பட அதிகளவு இடமிருப்பதோடு, பக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளுக்கு மிகவும் பலவீனமான எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றனர். அதன் விளைவாக, வெதுவெதுப்பான இடம் காலில் விரைவாக உருவாக்கப்படுவதோடு, முழு காலிலும் செலுலைடிஸ் பரவலடைந்து காலை அகற்றும் நிலமைக்கு இட்டுச் செல்லும்!

நீங்கள் நீரிழிவு நோயாளராக இருந்தால் உங்கள் பாதங்களை பராமரிப்பது எவ்வாறு?

  • பாதங்களுக்கு சுய பரிசோதனை:இதுவே செய்ய வேண்டிய முக்கிய விடயமாகும். அனைத்து நீரிழிவு நோயாளர்களும் தமது பாதங்களை நாளாந்தம் பரிசோதித்தல் வேண்டும். கொப்புளங்கள், வெட்டுகள், வெடிப்புகள், தடித்த தோல், கீறல்கள், நிறமாற்றங்கள், வீக்கங்கள் மற்றும் வெதுவெதுப்பான இடத்தைப் போன்ற வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் இடங்களை அவதானியுங்கள். பங்கசு தொற்றின் அடையாளங்களுக்காக நகங்களுக்கு இடையில் பாருங்கள். உள் வளர்ந்துள்ள கால் நகங்களையும் பங்கசு தொற்றுக்காக சோதனை செய்யுங்கள். மேலுள்ள ஏதேனுமொரு நிலைமை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் மிக விரைவாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது சிறந்தது. சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள உங்களது அடுத்த கிளினிக் திகதி வரை காத்திருத்தல் விவேகமற்றது என்பதோடு தாமதமாகவும் அமையலாம். உங்கள் பாதங்களை போதுமான வெளிச்சத்தில் சோதிப்பதோடு, அடிப்பாதங்களை அவதானிக்க கண்ணாடி ஒன்றைப் பாவியுங்கள். உங்களுக்கு கண்பார்வை குறைபாடு இருந்தால் அல்லது பாதங்களை அவதானிக்க முடியாதவாறு நீங்கள் தடித்தவராக இருந்தால், வேறு ஒருவரது உதவியோடு உங்கள் பாதங்களை ஒவ்வொரு நாளும் பரிசோதியுங்கள்.
  • உங்கள் பாதங்களை நாளாந்தம் கழுவுங்கள்: குறைந்தபட்சம் ஒரு தடவையாவது கழுவி கவனமாக உலர விடுங்கள். கழுவுவதற்காக ஒருபோதும் சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் சூடு அதிகமாக இருப்பினும் உங்கள் பாதங்களால் அதனை உணர முடியாமல் இருக்கலாம். உங்கள் பாதங்களை மென்மையான துணியொன்றால் துடைத்து உலர்த்துவதோடு, கால் விரல்களுக்கிடையில் விசேட கவனம் செலுத்துங்கள். அதன் பின்பு ஏதேனும் ஈரலிப்பளிக்கும் க்றீம் அல்லது ஒயின்மென்ட்டை நீங்கள் பூசலாம்.
  • உங்கள் கால் நகங்களை நேர் குறுக்காக வெட்டுங்கள்:உங்கள் நகங்களின் ஓரங்களை அல்லது உள் வளர்ந்திருக்கும் கால் நகங்களை வெட்ட வேண்டாம். குளியலுக்கு பின்னர் நகங்கள் மிருதுவாக இருப்பதனால் நகங்களை வெட்டுவது எளிதானது.
  • சுய சிகிச்சைகளைத் தவிருங்கள்: நீரிழிவு நோயாளருக்கு ஆணிகள், தடித்த தோல், கொப்புளம் என்பவற்றின்போது மேற்கொள்ளப்படும் முறையற்ற சிகிச்சைகள் உறுப்புகள் பாதிக்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும். மருத்துவரது ஆலோசனையற்ற நேரடியான மருந்துகள் மற்றும் வீட்டில் அறுவை செய்தல் என்பவற்றை எப்பொழுதும் தவிருங்கள்.
  • வெற்றுப் பாதங்களோடு நடப்பதைத் தவிருங்கள்:: நீரிழிவு நோயாளர் ஒருவருக்கு உறங்கும் மற்றும் குளிக்கும்போது மாத்திரமே வெற்றுப்பாதம் அனுமதிக்கப்படும்.
  • உங்கள் பாதணிகள் மற்றும் காலுறைகள் பற்றி அதிக அவதானத்தோடு இருங்கள்: கால் விரல்கள் அவற்றின் இயற்கையான நிலையில் இருப்பதற்கு போதுமான இடமுள்ள சௌகரியமான, நன்கு பொருந்தும் பாதணிகளைத் தெரிவு செய்யுங்கள். காலணிகளை எப்பொழுதும் மாலை நேரத்தில் வாங்குங்கள், ஏனெனில், நாளின் பிற்பகுதியில் பாதங்கள் சற்று வீங்கி காணப்படும்.
  • காலணி வெட்டுகளைத் தவிர்ப்பதற்காக புதிய காலணிகளுக்கு படிப்படியாக மாறுங்கள்: ஏதேனும் கூர்மையான துருத்தங்கள், கிழிந்துள்ள முடிவிடங்கள் மற்றும் முரடான ஓரங்கள் போன்ற உங்கள் தோலுக்கு முரடாக அமையக்கூடிய இடங்களுக்காக காலணிகளின் உட்பகுதியை பரிசோதியுங்கள்.
  • உங்கள் பாதங்களுக்கு பயிற்சி அளியுங்கள்: பொதுவான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இரத்தத்திலுள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தி நோயாளரின் பொது உடல் நலத்தை மேம்படுத்துவதனால், அநேகமான நீரிழிவுகளுக்கு இது சிறந்த யோசனையாகும்.
  • கால்களைக் குறுக்குவதைத் தவிருங்கள்: இது நீண்டகாலமாக நடைபெறும்போது ஏற்கனவே குறைவடைந்திருந்த பாதங்களுக்கான இரத்த ஓட்டத்தை மேலும் பாதிப்பதோடு, இது நரம்புகளின் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கும்.
  • புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: நீரிழிவுடன் புகைப்பிடிப்பது அபாயகரமான ஒன்றாகும், அது உங்கள் உறுப்புகளுக்கு மட்டுமல்லாது உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளராக இருந்தால், உங்களது பாதங்கள் உங்கள் முகத்தைவிட முக்கியமானவை. ஒவ்வொரு சந்திப்பின் போதும் உங்கள் பாதங்களை மருத்துவருக்கு காட்டுங்கள். மருத்துவ சோதனையின்போது, மருத்துவர் உங்கள் பாதங்களை அவதானிப்பதற்காக காலுறைகளை கழற்றுவதை உறுதி செய்யுங்கள்.

ஆகவே உங்கள் பாதங்களை கவனமாகப் பராமரியுங்கள். நீரிழிவு இருக்கும்போது உங்கள் பாதங்கள் வழமையானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிகத்திருத்தமான பாதங்களுடன் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை பொருட்படுத்தாவிட்டால் நிகரான, சிறந்த மாற்று ஒன்றை ஒருபோதும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியாது.

நீரிழிவும் கண் நோய்களும்

நீரிழிவு உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கண் பிரச்சினைகள் ஏற்பட அதிக இடமுண்டு. இந்நிலமைகள் தீவிரமான பார்வை குறைபாடு அல்லது நிரந்தர பார்வையின்மையை ஏற்படுத்தலாம்.

நீரிழிவில் கண் நோய்கள்:

கண் புரை நோய்

இது கண் வில்லையில் ஏற்படும் புரை வளர்ச்சியாகும். நீரிழிவு உள்ளவர்களுக்கு சற்று முந்தைய வயதிலேயே கண் புரை நோய் உருவாகின்றது.

கண் அழுத்த நோய்

கண்ணின் உள்ளே காணப்படும் திரவத்தின் அழுத்தத்தை அதிகரிக்கிறது, அது கட்புலன் நரம்பின் பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும் இட்டுச் செல்லும். ஏனையோருடன் ஒப்பிடும்போது நீரிழிவு உள்ள ஒருவருக்கு இந்நிலமை ஏற்படுவதற்கு இரு மடங்கு வாய்ப்புண்டு.

நீரிழிவு விழித்திரை நோய்

இதுவே அதிக பொதுவான நீரிழிவு கண் நோயாகவும் வயது வந்தவர்களது கண்பார்வை இழப்புக்கு பிரதான காரணியாகவும் உள்ளது. இது விழித்திரையிலுள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உருவாகின்றது. விழித்திரை என்பது கண்ணின் பிற்பகுதியில் அமைந்துள்ள ஒளியை உணரக்கூடிய படலம் ஆகும். நீரிழிவு விழித்திரை நோயில் பல்வேறு கட்டங்கள் காணப்படுகின்றன. அவை:

பின்புல நீரிழிவு விழித்திரை நோய்

விழித்திரையிலுள்ள இரத்த நாளங்கள் சேதமடையும்போது, அவை திரவக் கசிவை அல்லது இரத்தக் கசிவை ஏற்படுத்தும். இது விழித்திரையில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு exudates எனப்படும் படிவுகளை உருவாக்கும்.

துரிதவளர்ச்சி நீரிழிவு விழித்திரை நோய்

இது விழித்திரை நோயின் தீவிர கட்டமாகும். விழித்திரை நோய் அதிகரிக்கும்போது விழித்திரையிலுள்ள இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது புதிய குருதிக் கலங்களை உருவாக்குவதற்கு காரணமாகும். இப்புதிய கலங்கள் மிகவும் நலிவாக இருப்பதோடு இலகுவாக இரத்தத்தை கசியச் செய்யும்.

கண் பிரச்சினைகள் தொடர்பான பரிசோதனைகள் (விழித்திரை நோய்)

விரிவான கண் பரிசோதனையில் விழித்திரை நோய் இனங்காணப்படுவதோடு அதில் இவை உள்ளடங்கும்.

கண் அட்டவணை பரிசோதனை உங்களது தூரப்பார்வையை பரிசோதிக்கிறது

  1. கண்பார்வை மதிப்பீட்டு சோதனை
  2. அகலமாக்கப்பட்ட கண் சோதனை
    • உங்கள் கண்ணை அகலமாக்குவதற்காக துளிகள் இடப்படும்
    • இதனால் உங்கள் மருத்துவர் கண்ணின் உட்பகுதிகளை தெளிவாக காண முடிவதோடு இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை அவதானிக்கலாம்.
    • உங்கள் மருத்துவர் ophthalmoscope என்ற விசேட உபகரணத்தைப் பயன்படுத்தி, விளக்கு, சிலசந்தர்ப்பங்களில் உங்கள் விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளில் ஏதேனும் இரத்த நாளக் கசிவுகள், விழித்திரை வீக்கம், சேதமாக்கப்பட்ட நரம்பிழையங்கள் மற்றும் ஏனைய கண் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை ஆராய்வதற்கு விழித்திரை கெமரா என்பவற்றைப் பயன்படுத்துவார்.
  3. கண் அழுத்தத்தை சரிபார்த்தல் (glaucoma)

பாதணிகள் மற்றும் ஓர்தோடிக்ஸ்

நீரிழிவு நோயாளர்களுக்கு, அவர்கள் நோயின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தாலும், முழுமையான பாத பராமரிப்பு மற்றும் பாதக் கோளாறுகளுக்கான சிகிச்சையில் திருத்தமான பாதணிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது. நீரிழிவுக்கு உள்ளான ஒருவர் சரியான பாதணிகளை அணிதல் வேண்டும். நீரிழிவு நோயாளர்களுக்கான சாதாரண காலணிகளுடன் ஒப்பிடும்போது சிறப்பு பாதணிகள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இவ் விசேட பாதணிகள் கால் விரல்களை உள்ளடக்குவதற்கு போதுமான இடத்தை கொண்டவை, வழுக்காதவை மற்றும் மிருதுவான திண்டு வைக்கப்பட்ட உட்பகுதியைக் கொண்டவை. நரம்புக்கோளாறு பற்றிய ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால், அல்லது உணர்ச்சிக் குறைபாடு இருப்பின் சரியான பாதணிகளை அணிவது மிக முக்கியமானது.

தவறான வகை அல்லது பொருத்தமற்ற காலணிகளினால் ஏற்படும் மேலதிக அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக கொப்புளங்கள், தடித்த தோல், ஆணிகள் அல்லது பாதப் புண்கள் ஏற்படலாம். இது உணர்ச்சியற்ற பாதத்தில் மட்டுமல்லாது, இரு பாதங்களிலும் நரம்புக் கோளாறின் அறிகுறி ஏதுமின்றி ஏற்படலாம். விசேட பாதணிகளை அணிவதன் மூலமாக இவ்வாறான பல தீவிர நீரிழிவு பாத கோளாறுகளை நீரிழிவு நோயாளர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். அத்துடன் சரியான வகை காலணியை, பொருத்தமான அளவில் வாங்குவதற்கு நோயாளர்கள் கற்றுக்கொள்வதும் முக்கியமானது, அதன் மூலமாக எதிர்கால பிரச்சினைகள் தடுக்கப்படலாம்.

நீரிழிவு நோயாளர்களுக்கான விசேட பாதணிகள் மற்றும் ஓர்தோடிக்ஸின் நன்மைகள்

  • மேலதிக அழுத்தத்துக்கு உள்ளாகும் இடங்களுக்கு நிவாரணம்:

பாதத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மேலதிக அழுத்தம் காணப்பட்டால், அது சருமப் புண்கள், தடித்த தோல், ஆணிகள் மற்றும் பாதப் புண்கள் உருவாக காரணமாகலாம். நீரிழிவுக்கான பாதணிகள் இம் மேலதிக அழுத்தத்தில் காணப்படும் இடங்களை விடுவிக்க உதவி, அதன் மூலமாக நீரிழிவு தொடர்பான பாதப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைக்கும்.

  • அதிர்வையும் நடுக்கத்தையும் குறைக்கும்:

பாதணியின் அடி மீதான மொத்த அழுத்தம் மற்றும் பாதத்தின் அடிப்பகுதி மீதான அதிர்ச்சியை விசேட பாதணிகள் குறைக்கின்றன.

  •  உறுப்பு விகாரங்களை நிலைப்படுத்தி ஒத்துழைப்பு வழங்குகிறது

உறுப்பு விகாரமானது charcot ஈடுபாடு, பெருவிரல் முட்டி, கொழுப்பு இழையத்தின் இழப்பு, சம்மட்டி விரல்கள் மற்றும் உறுப்பு நீக்கங்கள் போன்ற நிலைமைகள் காரணமாக ஏற்படலாம் என்பதோடு, வலியைக் குறைப்பதற்கும் மேலதிக சேதத்தை தவிர்ப்பதற்கும் நிலைப்படுத்துதல் முக்கியமானது.

  • எடை அகற்றல் பாதணிகளால் குணமடைதலை மேம்படுத்தல்:

ஆணிகள் அல்லது பாதப்புண் உள்ளவர்கள் எடை அகற்றல் உள்ளடிகளை அணிவதன் மூலமாக குணமாக்கற் செயற்பாட்டை மேம்படுத்த முடியும்.

  • பாத விகாரம் உள்ளவர்களுக்காக விசேடமாக கட்டமைக்கப்பட்ட பாதணிகள்:

கட்டமைக்கப்பட்ட பாதணிகள், பாதத்திலுள்ள சில இணைப்புகளின் அசைவுகளை மட்டுப்படுத்துவதோடு, அதன் மூலமாக எரிச்சல் குறைவடைந்து, வலிக்கு நிவாரணமளித்து, அதிக நிலையான மற்றும் செயற்படும் பாதத்தை அடைய உதவுகிறது. பாத விகாரம் உள்ளவர்கள் மற்றும் கீழ் உறுப்புகள் நீக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பாதத்தின் அளவு மற்றும் வடிவத்துக்கேற்ப விசேடமாக கட்டமைக்கப்பட்ட பாதணிகளை அணிதல் வேண்டும்.

  • பாதிக்கப்பட்ட பாதத்துக்கு ஓர்தோடிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் நிலைப்பு:

 ஓர்தோடிக்ஸ் என்பது பாதத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அறுவை சிகிச்சையின்றி தீர்ப்பதற்காக அணியப்படும் சாதனங்கள் ஆகும். அவற்றில் சிலிக்கன் ஜெல் உள்ளடிகள், குதிகால் திண்டுகள், விரல் வேறாக்கிகள், முன்பாத திண்டுகள், விரல் காப்பான்கள் மற்றும் வளைந்த ஏந்திகள் என்பன உள்ளடங்கும். பாத விகாரத்தின் வகைக்கு ஏற்றவாறு ஓர்தோடிக்ஸ் சரியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

நீரிழிவும் உணவுப் பழக்கமும்

நீரிழிவு ஒரு சிதைவடையச் செய்யும் நோய் என்பதால், நோய் இனங்காணப்பட்ட நாளில் இருந்து இரத்தத்தின் சர்க்கரை மட்டம் குறித்து கட்டுப்பாடான அளவீடுகளை எடுப்பது முக்கியமானது. நீரிழிவு நோயாளர்களுக்கு அவர்களது மருந்துகளுக்கு மேலதிகமாக தொடர்ச்சியான உடற்பயிற்சி செயற்பாடுகள் மற்றும் சரியான உணவுப்பழக்க கட்டுப்பாடு என்பவை அதிகளவு பரிந்துரைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் ஒருவரது உடலின் அனைத்து பாகங்களையும் நீரிழிவு பாதிப்பதனால், தொடர்ச்சியான உடற்பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் சரியான உணவுப் பழக்கம் என்பன நாளாந்த வாழ்க்கையில் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது. அது நீடித்த காலத்தில் நீரிழிவின் பிரச்சினைகள் உடற் பாகங்களை பாதிப்பதை தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.

நீரிழிவு நோயாளர்களுக்கான உணவுப் பழக்கம் என்று ஒன்றில்லை. நீரிழிவுக்கு உள்ளான ஒவ்வொருவரும் தமக்கு பொருத்தமான உணவுகள் பற்றியும் அவரது மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் பற்றியும் அவதானத்துடன் இருத்தல் வேண்டும்.

நீரிழிவு நோயாளர்களுக்கான உணவுப் பழக்கங்கள் பற்றிய முக்கிய அறிவுறுத்தல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • உங்கள் உணவுகளை புறக்கணிக்க அல்லது தாமதப்படுத்த வேண்டாம்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு பிரதான உணவுகளையும் இடையிடையே ஆரோக்கியமான சிற்றுண்டிகளையும் சாப்பிடுங்கள்.
  • உங்கள் உணவில் நிறைய பச்சை இலை காய்கறிகள், அதிக பழங்கள், பருப்பு மற்றும் தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • உடற் பயிற்சிகளை ஆரம்பிக்க முன்பு ஏதேனும் சிற்றுண்டி அல்லது பானம் (சீனி இல்லாதது) எடுத்துக்கொள்ளுங்கள்.
  • கொழுப்பு நிறைந்த மற்றும் உப்புத் தன்மையான உணவுகளை குறையுங்கள்.
  • மது அருந்துவதைத் தவிருங்கள்.
  • சுகயீனமான காலப்பகுதியில் உங்கள் சர்க்கரை மட்டங்களை பேணுவதற்காக பொருத்தமான உணவுகள் பற்றி அறிந்து வைத்திருங்கள்.
  • உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆரோக்கியமான மட்டத்தை விட குறையும் நேரங்கள் பற்றி விழிப்புடன் இருப்பதோடு, அவ்வாறான நிலைமைகளை நீங்கள் அடிக்கடி சந்தித்தால் அதற்கேற்ப உங்கள் உணவுகளை மாற்றுங்கள்.

அடிக்கடி எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் வருமாறு:

  • பச்சை காய்கறிகள் - கோவா, லீக்ஸ், போஞ்சி, முருங்கைக்காய், பாகற்காய், கீரை வகை, வல்லாறை, முகுனவென்ன, கன்குன் மற்றும் பச்சிலைகள் என்பன.
  • நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் - கொஹில, வாழைப்பூ, புடலங்காய் என்பன
  • தானியங்கள் - பாசிப்பயறு, கடலை, கௌபி, முந்திரிகை என்பன.
  • கொழுப்பு குறைவான அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலுற்பத்திகள் - யோகட், கொழுப்பு குறைவான பட்டர், ஆடை நீக்கப்பட்ட அல்லது பகுதியளவு ஆடை நீக்கப்பட்ட பால்
  • பழங்கள் - பப்பாளி, பச்சை ஆப்பிள், தர்பூசணி, கொய்யா, ஆனைக்கொய்யா, எலுமிச்சை, அம்பரல்லா, வில்வம் பழம், நெல்லி என்பன.
  • கலவை மாச்சத்து உணவுகள் - சிவப்பரிசி, அளவாக அவிக்கப்பட்ட அரிசி, பாஸ்மதி அரிசி, பிரவுன் ப்ரெட், வோல் மீல் ப்ரெட், ஆட்டா மா, ஓட் மீல் மற்றும் வேர் காய்கறிகள் என்பன.
  • • மீன் மற்றும் மீன் எண்ணெய் - சிறிய மீன்களான உருள்ள, சாலை மற்றும் நெத்தலி என்பன நீரிழிவு நோயாளர்களுக்கு அதிக போஷாக்கு நன்மைகளை தருகின்றன.

அடிக்கடி உட்கொள்ளக் கூடாத அல்லது தவிர்க்க வேண்டிய உணவுகளாவன:

  • சீனி சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள்
  • உடனடி உணவுகள் மற்றும் பானங்கள்
  • வடிகட்டப்பட்ட பால்
  • நெய், பட்டர், சீஸ் போன்ற கொழுப்பு கூடிய உணவுகள்
  • எளிய சர்க்கரை அடங்கியுள்ள உணவுகள் - மேசை சீனி, தேன், ஐஸ்கிறீம், ஜாம், புடிங், கருப்பட்டி, பாகு, ரெய்சிங், சுல்தானா கேக், பேஸ்ட்ரி மற்றும் சிற்றுண்டிகள் என்பன.

மேற்குறிப்பிட்டவை பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. எனினும், ஒருவரது மருத்துவ நிலைமைகள், உடல் நிறை மற்றும் உடற் செயற்பாட்டு மட்டங்கள் என்பவற்றுக்கு அமைவாக பரிந்துரைகள் வேறுபடலாம்.

உங்களது மருத்துவ நிலைமைகள், உணவு விருப்பங்கள், கிடைக்கும் உணவுகள், அணுகுதன்மை, தயாரிப்பு மற்றும் உங்கள் உடற் செயற்பாட்டு மட்டம் பற்றி உங்களது உணவு ஆலோசகர் அல்லது போஷாக்கு ஆலோசகருடன் கலந்துரையாடி உங்களுக்கான தனிப்பட்ட ஒரு உணவுத் திட்டத்தை பெற்றுக்கொள்ளுதல் சிறந்தது.

ஆய்வுகூட சேவைகள்

செலிங்கோ ஹெல்த் ஆய்வுகூடத்தின் ஊழியர்கள் எமது வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புகளை திருப்தி செய்யும் விதமாக உயர்தரமான மதீப்பீட்டுடன் கூடிய மருத்துவ நோயறிதல் சேவையை அர்ப்பணிப்புடன் பெற்றுத் தருகிறார்கள். எமது ஆய்வுகூட சேவையில் நிபுணத்துவம் மற்றும் நெறிமுறை மதிப்புகளை நாம் ஈடுபாட்டோடு பின்பற்றுகின்றோம்.

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸ் ஆய்வுடத்திலுள்ள அனைத்து ஊழியர்களும் அதிகபட்ச வாடிக்கையாளர் திருப்தியை எட்டுவதற்கும், அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நியமங்களுக்கு ஒத்த சேவை மேம்பாட்டை அடைவதற்கும் கடுமையாக முயற்சிக்கிறார்கள். (சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்ப்பு, உதா: Bio –Red Laboratories EQAS USA)

எமது பலதரப்பட்ட ஆய்வுகூட சேவைகளில் இரத்தம், சிறுநீர், மலம் மற்றும் ஏனைய உடல் திரவங்கள் தொடர்பான வழமையான மற்றும் விசேட ஆய்வுகூட பரிசோதனைகள் உள்ளடங்கும். எமது சேவைகளின் தனித்துவமான அம்சமாக இருப்பது அநேகமான அறிக்கைகள் குறித்த அதே நாளில் வெளியிடப்படுவதாகும்.

உதா: HbA1C பகுப்பாய்வு, நீரிழிவை சோதிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு விசேட பரிசோதனை ஆகும். இதன் அறிக்கையை இரு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

பின்வரும் பரிசோதனைகள் எமது ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:

  • Fasting Blood sugar
  • Blood Urea
  • Creatinine
  • Total Cholesterol
  • Uric Acid
  • Lipid Profile
  • Liver Profile
  • Full Blood Count
  • ALT(SGPT)
  • AST(SGOT)
  • Gamma GT
  • Alkaline Phosphatase
  • Total Protein
  • Serum Triglycerides
  • HIV
  • Glycosylated Haemoglobin(HbA1C)
  • Urine Microalbumin
  • Urine Full Report
  • Stool for Occult Blood
  • Pap Smears for cytology

மருந்தகம் மற்றும் நீரிழிவு விற்பனையகம்

செலிங்கோ டயபெடீஸ் சென்டரிலுள்ள நீரிழிவு விற்பனையகம் நீரிழிவு தொடர்பான அனைத்து பொருட்களையும் கொண்டுள்ளது:

  • மருந்துகள்
  • குளுக்கோஸ் மானிகள்
  • சர்க்கரை பிரதியீடுகள் மற்றும் நீரழிவு உணவுப் பொருட்கள்
  • காயக் கட்டுப் பொருட்கள்

நீரிழிவு விற்பனையகத்தின் மருந்தகம் உங்களது அனைத்து மருந்துசார் தேவைகளையும் நிறைவேற்றுவதோடு, தகைமையுள்ள நிபுணத்துவமான மருந்தாளரால் நிர்வகிக்கப்படுகிறது.

மெமரி கிளினிக் (டிமென்ஷியா)

வயதானவர்கள் இடையே ஏற்படும் டிமென்ஷியா எனும் நோயின் ஆரம்ப அறிகுறியாக ஞாபகசக்தி குறைபாடு இருக்கலாம். டிமென்ஷியா என்பது, நினைவுபடுத்தும், சிந்திக்கும் மற்றும் காரணம் கூறும் ஆற்றலை தொடர்ந்து குறைந்து செல்வதாகும். டிமென்ஷியா ஏற்பட பல்வேறு நோய்கள் காரணமாக அமையலாம். அதனால், உங்களது மருத்துவராலேயே அல்சைமர் நோயை வேறு வகை டிமென்ஷியாக்களில் இருந்து பிரித்தறிய முடியும். எனினும், டிமென்ஷியாவின் அறிகுறிகளை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும், அதனால் எப்பொழுது மருத்துவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உங்களால் தீர்மானிக்க முடியும். ஆரம்ப நடவடிக்கைகள் இந்நோயை முறையாக கையாள உதவும்.

டிமென்ஷியாவுக்கான பரிசோதனைக் கருவி

உங்கள் பிரச்சினையை விளக்கும் கட்டத்தை அடையாளமிடுங்கள்

    ஞாபகசக்தி குறைவு (நேர ஒதுக்கீட்டை மறத்தல், அண்மைய நிகழ்வுகள் அல்லது உரையாடல்களை நினைவுபடுத்த முடியாமை)
    பொருட்களை இடம்மாறி வைத்துவிட்டு யாராவது திருடியிருப்பர்கள் என நினைத்தல்
    தன்னிலை இழப்பு (பழக்கமற்ற இடங்களில் குழம்புதல், வருடம் அல்லது நேரம் தெரியாமை, வீடு திரும்பும் வழி தெரியாமை)
    பேச்சு (எளிய, நன்கு தெரிந்த பொருட்களின் பெயர்களை மறத்தல், பொருத்தமற்ற வார்த்தைகளை பாவித்தல், வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லுதல்)
    பொழுதுபோக்கு மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகளில் ஆர்வமிழத்தல், வழமையாக உங்களுக்கு மகிழ்ச்சியளித்த செயற்பாடுகளை கைவிடல்.
    நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அல்லது குடும்பத்தினரை அடையாளம் காணல் (பேரப்பிள்ளைகள் யாரென மறத்தல், நண்பர்களை அந்நியமானவர்களாக நினைத்தல்)
    சிக்கலான செயல்களை மேற்கொள்ளல் (சரிபார்ப்பு புத்தகம் வைத்திருத்தல், காசை எண்ணுதல், தொலைபேசியைப் பயன்படுத்தல்)
    குளறுபடியான நடத்தை (உத்வேகமாக செயற்படல்)
    மோசமான தனிப்பட்ட சுகாதாரம் (பற்துலக்க மறத்தல், மெதுவாக ஆடை அணிதல் அல்லது பொருத்தமற்ற ஆடைகளில் இருத்தல், குளிப்பதற்கு மறத்தல்)

மேற்குறிப்பிட்ட ஏதேனும் கட்டங்களில் நீங்கள் அடையாளமிட்டிருந்தால், டிமென்ஷியா அல்லது ஏனைய மருத்துவ பிரச்சினைகளுக்கு உள்ளாகும் சாத்தியம் உங்களுக்கு உண்டு.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் +94112490290

ஆண்கள் கிளினிக்

ஆண் பாலியல் கோளாறுகள் பொதுவானவை, அதேவேளை அரிதாக பேசப்படுபவை. மன அழுத்தம், ஏக்கம் மற்றும் உளச்சோர்வு என்பன இதற்கான உளவியல் காரணிகளில் சில. ஆண்மைக்குறைவு மற்றும் அதனை ஒத்த பிரச்சினைகளுக்கும் முழு உடலையும் பாதிக்கும் நோய்கள் காரணமாக இருக்கலாம்.

ஆண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள்:

  • பாலியல் பிரச்சினை
    • பாலியல் நாட்டம் குறைவடைதல்
    • விறைப்பை அடைவதிலும் தொடர்ந்து பேணுவதிலும் பிரச்சினை
    • துரிதமான அல்லது தாமதமான உச்சமடைதல் பிரச்சினை
    • ஆணுறுப்பின் வழமைக்கு மாறான கட்டமைப்பு
  • சிறுநீர் கழிப்பதில் சிரமம்
  • முன்னிலை சுரப்பி பிரச்சினை

செலிங்கோ ஹெல்த்கெயார் சென்டரிலுள்ள ஆண்கள் கிளினிக், சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதோடு, ஆண்களின் பாலியல் குறைபாடு தொடர்பான சிகிச்சைக்கு விசேடமானது. அதிசிறந்த வசதிகள், மருத்துவ அணியினர் மற்றும் சேவைகளின் துணையை இந்த கிளினிக் கொண்டுள்ளது. மருத்துவமனை ஒன்றிலிருந்து வேறுபட்ட சூழல் நீங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதோடு, உங்கள் தனிப்பட்ட விடயங்கள் அனைத்து நேரங்களிலும் எமது தகைமை மிகுந்த நட்பான ஊழியர்களால் பாதுகாக்கப்படும்.

எமது சேவைகளில் உள்ளடங்குவன:

  • பாலியல் குறைபாடு தொடர்பான ஒரு தகைமையுள்ள விசேட மருத்துவர் மற்றும் ஒரு சிறுநீரக மருத்துவரால் நோய் இனங்காணல் பரிசோதனை
  • அனுபவமிக்க மருத்துவர்களுடன் தமது பிரச்சினைகளை கலந்துரையாட ஒவ்வொரு நோயாளருக்கும் போதுமானளவு நேரம்
  • தொடர்புடைய அறிகுறிகளுக்கு பொருத்தமான ஆராய்ச்சிகள்
  • ஒருங்கிணைந்துள்ள பலவீனங்களை இனங்காணுதல் மற்றும் பொருத்தமான அறிவுறுத்தல் வழங்குதல்
  • பாலியல் பிரச்சினைகளுக்கு பொருத்தமான சிகிச்சை உதா: விறைப்பு பிரச்சினைகள்

தரவுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்.

செலிங்கோ ஹெல்த்கெயார் சென்டர் ultrasound scans X-rays, mammograms மற்றும் ultra sound guided FNAC உட்பட பலதரப்பட்ட கதிர்வீச்சியல் சேவைகளை வழங்குகின்றது. இந்நிலையமானது அதிசிறந்த மற்றும் துல்லியமான சேவைகளைப் பெற்றுத்தர முற்றிலும் அண்மைய இயந்திரங்கள் மற்றும் தொழினுட்பங்களில் முதலீடு செய்துள்ளது.

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் முழுமையான புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சையை இயன் மருத்துவம் உள்ளடங்கலாக வழங்குகின்றது. இது அறுவை சிகிச்சை அல்லது விசேட சிகிச்சை ஒன்றிற்கு பின்னர் சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும். அனுபவமும் பொறுமையும் உள்ள இயன் மருத்துவ நிபுணர்களை நாம் கைவசம் கொண்டிருப்பதோடு, நோயாளர்கள் மீண்டும் வழமைக்கு வருவதற்கு உதவிட அவர்கள் மிகுந்த அன்புடன் உதவுகிறார்கள்.

logo