நீரிழிவு உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்துகொள்வது உங்களது உடலைப் பராமரிக்க உதவுவதோடு, நீரிழிவு பிரச்சினைகள் விருத்தியடைவதையும் தடுக்கும்.
அநேகமான நீரிழிவு பாதிப்புகளுக்கு இவையே மூலமாக அமைகின்றன: உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரோல் மட்டங்கள் மற்றும் இரத்தத்தின் குளுக்கோஸ் கட்டுப்பாடு குறைவடைதல்.
நீரிழிவு மற்றும் இரத்த ஊட்டக்குறை இதய நோய் என்பன நெருங்கிய தொடர்புடையவை.
நீரிழிவு உயர் இரத்த அழுத்தத்துக்கு பங்களிப்பதோடு, உயர் கொலஸ்ட்ரோல் மட்டத்துடன் தொடர்புடையது. அது இதய அடைப்பு மற்றும் இதய குழலிய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கும்.
இன்னுமொரு பொதுவான நீரிழிவு பிரச்சினை விழித்திரை நோய் ஆகும்.
ஏனைய அனைத்து நோய்களைப் போலவே, இந்நிலைமையும் வருடக் கணக்கில் மோசமாக கவனிக்கப்பட்ட, அல்லது கவனிக்கப்படாத நீரிழிவினால் ஏற்படுகின்றது. நீரிழிவு விழித்திரை நோய்க்கு பல அறிகுறிகள் உண்டு.
கண்ணின் பிற்பகுதியில் (விழித்திரை) உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைந்து கசிவதனால் விழித்திரை நோய் ஏற்படுகின்றது. உயர் இரத்த அழுத்தமும் விழித்திரை நோய்க்கு பங்களிப்பு செய்யும் முக்கிய காரணியாகும்.
நீரிழிவின் விளைவால் குறிப்பாக பாதிப்பு அபாயத்துக்கு உள்ளாகும் இன்னொரு உறுப்பு சிறுநீரகங்கள் ஆகும். அத்துடன் மோசமாக பராமரிக்கப்படும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் என்பன இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.
நீரிழிவின் விளைவாக ஏற்படும் சிறுநீரக நோய் டயபெடிக் நெப்ரோபதி என அழைக்கப்படும்.
சிறுநீரகம் பாதிப்படைவதற்கு ஒரு சில வருடங்கள் எடுத்துக்கொள்வதோடு, அது அபாயகரமான நிலைமையை அடைவதற்கு முன்னர் நெப்ரோபதி சோதனையில் இனங்காணப்படலாம். இதற்கான சிகிச்சையில் வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோலுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் உள்ளடங்கலாம்.
நீரிழிவினால் ஏற்படும் சருமப் பாதிப்புகள் வழமையாக நரம்புகள் மற்றும் சுற்றோட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவுகளே என்பதோடு, அதனால் உலர் சருமம், வெட்டுகள் குணமாவதற்கு அதிக காலமெடுத்தல், எரிவுகள் மற்றும் புண்கள், பங்கசு மற்றும் பக்டீரியா தொற்று, மற்றும் பாதத்தில் உணர்ச்சியின்மை என்பன ஏற்படலாம்.
நீரிழிவு உள்ளவர்கள் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையேனும் தங்கள் பாதங்களை பரிசோதனை செய்துகொள்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். நீரிழிவினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் பொதுவாக நீரிழிவு பாதம் என குறிப்பிடப்படுகின்றது.
மூலம் - www.diabetes.co.uk