புற்றுநோய் சிகிச்சை வெவ்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படலாம் என்பதோடு இது எப்பொழுதும் குறித்த ஒரு நோயாளரின் தேவைக்கேற்பவே மேற்கொள்ளப்படுகின்றது. சிகிச்சை பற்றிய முடிவினை மேற்கொள்ளும்போது பல காரணிகள் கருத்திற் கொள்ளப்படுகின்றன. அவை வகை, புற்றுக்கட்டியின் அளவு மற்றும் அமைவிடம், இதுவரை அது பரவியுள்ள மற்றும் பரவுவதற்கு எதிர்பார்க்கப்படும் எல்லை, அத்துடன் நோயாளரின் வயது, பாலினம், பொது உடல்நலம் மற்றும் தனிப்பட்ட சிகிச்சை விருப்பத்தேர்வுகள் என்பனவாகும்.
புற்றுநோய் கலங்கள் எமது சாதாரண கலங்களைவிட மிக வேகமாகப் பிரிகையடைகின்றன. கதிரியக்கம் இவற்றை தாக்குகிறது. இது கலங்களில் காணப்படும் நீருடன் தாக்கமடையும் போது, கலத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் DNA அல்லது மரபணுப் பதார்த்தத்தை பாதிக்கிறது. வழமையாக, கலங்களால் தமது பழுதுகளை நிவர்த்தி செய்து தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கு முடியும். எனினும் புற்றுநோய் கலங்களால் அவ்வாறு முடியாது. இச் செயன்முறை சாதாரண கலங்களையும் பாதிக்கும், எனினும், அவை தம்மை சிறப்பாக சீரமைத்துக்கொள்ளும்.
புற்றுநோயியலாளர் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களது கையாளல் மற்றும் சிகிச்சையில் ஈடுபடும் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் ஆவார். இவரே கெமோதெரபி மற்றும் ரேடியோதெரபி என்பவற்றைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சையளித்து அதன் விளைவுகளை நீக்கும் செயன்முறையில் ஈடுபடுவார்.
நிபுணர் ஒருவர், அவருக்கு உதவியாக ஒரு மருத்துவப் பௌதிகவியலாளர் மற்றும் ஒரு சிகிச்சையளிப்பவருடன் அதிநவீன கணனிகள் (Oncentra, PLATO) பயன்படுத்தப்படுவதனால் மிகப் பொருத்தமான வெவ்வேறு சிகிச்சைத் திட்டங்களை உருவாக்க முடிகின்றது. இதன் மூலமாக சாதாரண இழையத்துக்கு எவ்வித பாதிப்புகளுமின்றி புற்றுநோய்க் கட்டிகளை அழிக்க முடியும்.
வழமையாக, வெளிநோயாளர் என்ற அடிப்படையிலேயே நீங்கள் கதிரியக்க சிகிச்சையைப் பெறுவீர்கள். முதலாவது விஜயம் ஒரு மணித்தியாலம் வரை நீடிக்கும், ஏனெனில் இதன்போது அதிகளவு முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு அடுத்தடுத்த சிகிச்சையும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். சிகிச்சையின் பின்னர், நீங்கள் வீட்டிற்கு செல்ல முடிவதோடு உங்களது வழமையான செயற்பாடுகளில் ஈடுபடலாம்.
எமது அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் குழாம் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனித்துவமான சிகிச்சைத் திட்டத்தை வடிவமைக்கும். அத்திட்டம் linear accelerator அல்லது Nucletron Micro Selectron HDR Brachytherapy Unit போன்ற ஏனைய மேம்படுத்தப்பட்ட கதிரியக்க சிகிச்சை கருவியை உள்ளடக்கியதாக அமையும்.
முதலாம் விஜயம் நோயாளர் கதிரியக்க புற்றுநோயியலாளர் ஒருவரை சந்தித்து சிகிச்சைத் தெரிவுகளைப் பற்றி கலந்துரையாடுவார்.
நிலைப்படுத்தல் சிகிச்சை வேளையில் உங்களுக்கு சௌகரியமான நிலையை அறிந்துகொள்ள எமது அணியினர் உங்களோடு செயற்படுவார்கள். சிகிச்சை நடைபெறும் நேரம் முழுவதும் நீங்கள் நிலையாக இருப்பது முக்கியமானது. அதனால், சௌகரியமான ஒரு நிலையை அறிந்துகொள்ளல் அவசியம். பின் கதிரியக்க சிகிச்சையாளர் நோயாளருக்கு அசைக்க முடியாத சாதனமான தெர்மோபிளாஷ்டிக் உறையைப் பொருத்துவதோடு, இது வெதுவெதுப்பான நீரில் மிருதுவடைந்து, விறைப்பான அதேவேளை சௌகரியமான ஓட்டை உருவாக்கும். இது குளிரடைந்து இறுகும்போது நோயாளரின் உடல் அளவீடுகளுக்கு பொருத்தமாக அமையும்.
படமாக்கல் நோயாளர் CT- Simulator ஸ்கேன் இருக்கையில் சாய்வதோடு, சிகிச்சை முறையொன்றை உருவாக்குவதற்கும் சரியான நிலையை உறுதி செய்வதற்கும் படமாக்கல் செய்முறைக்கு உட்படுத்தப்படுவார்.
சிகிச்சை திட்டமிடல் நிலைப்படுத்தல் மற்றும் படமாக்கலின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நுட்பமான கணனி மென்பொருளின் உதவியோடு கட்டமைக்கப்பட்ட சிகிச்சை திட்டமொன்றை அணியினர் உருவாக்குவர்.
சிகிச்சை விநியோகம் சிகிச்சை இருக்கையில் நோயாளர் சாய்ந்துகொண்ட பிறகு இயந்திரம் படுக்கையை சுற்றிலும் அசைவதோடு, வலியை ஏற்படுத்தாத கண்ணுக்குத் தெரியாத கதிரியக்கத்தை வெளியேற்றும். சில சந்தர்ப்பங்களில் இருக்கையும் அசையும். நோயாளர் அறைக்குள் தனித்திருந்தாலும் அறைக்கு வெளியிலேயே கதிரியக்க சிகிச்சையாளர் இருப்பார். அவரால் நோயாளரை கண்காணிப்பதற்கும் சிகிச்சை நடைபெறும் வேளையில் அவருடன் கதைப்பதற்கும் முடியும்.
பின்தொடர்வு சிகிச்சை அணியானது படமாக்கல் சோதனைகள், எக்ஸ்-ரே மற்றும் இரத்தப் பரிசோதனைகள் ஊடாக நோயாளரின் முன்னேற்றத்தை கண்காணிக்கும். அவர்கள் மிக நெருக்கமாக நோயாளருடன் செயற்படுவதோடு உரிய சிகிச்சைகளை முன்னெடுப்பதற்காக மருத்துவருக்கு அறியத் தருவார்கள்.
எந்தவொரு மருத்துவ சிகிச்சையின் நோக்கமும் நோயாளரை குணமாக்குவதே. புற்றுநோய் சிகிச்சையின் நோக்கமும் அதுவே. எவ்வாறாயினும், அதியுயர் துல்லியம் மற்றும் அதிசிறந்த பராமரிப்பு என்பன அத்தியாவசியம். தொழினுட்ப அபிவிருத்திகள் மருந்தளவுகளை மிகத் துல்லியமாகவும் சிகிச்சைகளை பயனுறுதியுள்ள விதமாகவும் மாற்றியுள்ளன.
சில உதாரணங்களாக, வெளியக கதிரியக்கத்தை விநியோகிக்கும் Linear Accelerator வெளியக கதிரியக்கத்தின் மிகத்திருத்தமான முறையான Intensity Modulated Radiation Therapy (IMRT) அல்லது புற்றுநோய் சிகிச்சை தொழினுட்பங்களில் முக்கியமான 3D Conformal Therapy என்பவற்றை கூறலாம்.
படமாக்கல், நோயாளரை நிலைப்படுத்தல் மற்றும் இலக்கு வைத்தல் என்பவற்றில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால முன்னேற்றங்களும் சிகிச்சையின் பயனுறுதிக்கு பங்களிப்பு செய்கின்றன.
இன்றைய முன்னேற்றகரமான தொழினுட்பங்களின் உதவியினால் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கவேண்டிய தேவை அரிதானது. கிட்டத்தட்ட 95% புற்றுநோய் சிகிச்சைகள் வெளிநோயாளர் அமைப்பிலேயே வழங்கப்படுகின்றன மேலும் அனைத்து வெளிநோயாளர் புற்றுநோய் சிகிச்சை வசதிகளும் ஒரே மாதிரியானவை அல்ல.
ஒரு புற்றுநோய் நிலையம் நோயாளருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, புற்றுநோயாளரின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவேற்றிட மருத்துவர்கள், தாதிமார், தொழினுட்வியலாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். புற்றுநோய் நிலையமானது ஒவ்வொரு நோயாளருக்கும் அவசியமான அர்ப்பணிப்புமிக்க அதியுயர் தரத்திலான சேவைகளை தொடர்ந்து வழங்குதல் வேண்டும்.
நிபுணர்கள் உங்கள் பராமரிப்பை உறுதி செய்திட அனுபவமிக்க, தயவான தொழில் நிபுணர்கள் உங்களுக்குத் தேவை. செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் இனது கதிரியக்க புற்றுநோயியல் அணி இலங்கையின் அதி அனுபவமிக்க, மதிப்புமிக்க புற்றுநோயியலாளர் ஆலோசகர்கள் சிலருடன், ஒரு மருத்துவப் பௌதிகவியலாளர் மற்றும் அதிக பயிற்சி பெற்ற கதிரியக்க சிகிச்சையாளர்கள் மற்றும் தாதிமார் குழுவினரைக் கொண்டுள்ளது.
வசதிகள் சௌகரியமான, அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சூழல் உங்கள் சிகிச்சையை இலகுவாக்கும். எமது கதிரியக்க புற்றுநோயியல் தொகுதியானது, நோயாளருக்கு முன்னுரிமை தருகின்ற மற்றும் சௌரியமான, சுகமளிக்கும் சூழலில் தரமான புற்றுநோய் பராமரிப்பை பெற்றுத்தருகின்றது.
தொழினுட்பம் அதிக முன்னேற்றகரமான சிகிச்சை தொழினுட்பத்தால் பெறுபேறுகளை மேம்படுத்த முடியும். செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் தன்னகத்தே ஒரு அதிநவீன டோமோதெரபி இயந்திரம், Linear accelerator, Micro Selectron HDR Brachytherapy தொகுதி, ஒரு நுட்பமான முப்பரிமாண CT ஒருங்கிணைப்பாக்கி, சிகிச்சைத் திட்டமிடல் மற்றும் உறுதிப்படுத்தல் முறைமை, Radioiodine தொகுதி மற்றும் கெமோதெரபி வசதிகளைக் கொண்டுள்ளது.
நோயாளர் அவதானம் உங்களது புற்றுநோயை நீங்கள் எதிர்ப்பதற்காக விரிவானதும் தீவிரமானதுமான பராமரிப்பு உங்களுக்கு அவசியம். பயனுறுதிமிக்க சிகிச்சைத் தெரிவுகளுக்கு மேலதிகமாக சிகிச்சை நிலையமானது நரம்பியலாளர், சமூகப் பணியாளர் மற்றும் உளவள ஆலோசகர் என்பவர்களது சேவைகளுடன் நோயாளருக்கு அறிவுறுத்தும் வளங்கள் மற்றும் ஒத்துழைப்பு சேவைகளையும் பெற்றுத் தருகின்றது.